21. கைத்தலம் பற்றிட

0
592

கைத்தலம் பற்றிட…

தனக்கொரு துணை
இசைவாய், இசைப் போல் அமைய,

வாழ்நாள் முழுவதும் நேசமும், அன்புமாய் பரிமாறி இழைய,

கைத்தலம் பற்றியே உலா வரும்
கனாக்களுக்கில்லை இங்கே பஞ்சம்.

பொன்னும், பொருளுமில்லை
அன்பும், அரவணைப்பும் தேடும்
எத்தனை எளிமையான மானுடக் கனவு!

வரதட்சணைகள்,குடும்ப பெருமைகள்,
நல் வருமானம்,பெரிய வீடு,வாகனங்கள்,
ஜாதி, மதங்கள் ,சரும நிறம்,
உயரம்,பருமன்,ஜாதகம்

என்று கைத்தலம் பற்ற வாய்ப்பில்லாமைகளுக்கானஆயிரம் காரணங்கள் இங்குண்டு.

அதையும் தாண்டி, வெற்றிப் பெற்று,
கைத்தலம் பற்றியும் கூட,

இறுதி வரையிலும் பலருக்கும்
மனங்கள் பற்றிக் கொள்வதே இல்லை.

காதலும், அன்புமான கைத்தலம் பற்றும் வாழ்வின் கனவு நிறைவுறாமலேயே

பெருமைகள்,
அகங்காரங்கள்,
நாவெனும் சாட்டையின் சீற்றங்கள்,
கெடுமதி பழக்கங்கள்,
அதீத எதிர்பார்ப்புகள்,

இவை போல் ஆயிரம் காரணங்கள்

தன் இணையுடன் ஒவ்வாமை உணர்வு கொண்டே வாழ் நாள் கழித்து விடச் செய்யும்,
சாபங்களாய் இங்குண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here