30.எது வேண்டும்? _ கவிதை _ ஜான்சி

0
422

எது வேண்டும்?

தோல்விகள், போராட்டங்கள் வாழ்வின் நிஜம் என்றால்,

அதை மறக்க தேடும் தற்காலிக நிவாரண போதைகள் கனவன்றோ!!!

நிஜம் வலி தரும்,
கனவு இதம் தரும்.
எது வேண்டும் வலியா இதமா?

நிஜம் பயமுறுத்தும்,
கனவு மகிழ்வூட்டும்
எது வேண்டும் பயமா மகிழ்வா?

நிஜம் துன்புறுத்தும்,
கனவு ஆறுதலளிக்கும்.
எது வேண்டும் துன்பமா? ஆறுதலா?

நிஜம் பழி சொல்லும்,
கனவு பாராட்டும்.
எது வேண்டும் பழியா பாராட்டா?

நிஜத்தின் போராட்டங்கள் கடந்த பின் இளைப்பாறுதல் வரும்.
கனவின் ஆறுதலோ சில கணமே இதம் தரும்.

நிஜம் நிஜமாய் என்றும் இருப்பது
கனவோ கலைந்ததும் உண்மை இதுவோ? என திகைப்பது.

போதையில் திளைப்பது தற்காலிக பிரச்சனைகள் தவிர்ப்பு.

எதிர்த்துப் போராடுவதிலல்லவோ உள்ளது உந்தன் ஜெயிப்பு.

எனவே தோழா…

வீண் கனவுகளிலில்லை உந்தன் வாழ்வு உடனே விழித்துக் கொள்வாய்.

விண்ணைத் தொடும் உந்தன் ஆற்றல் அதை ஒருமுகப் படுத்தியே நிதம் நிஜம் வெல்வாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here