31. பண்டமாற்று _ கவிதை _ ஜான்சி

0
465

பண்டமாற்று

பொருளீட்டலில் லாப நோக்கு அதுவே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆனால் வளர்ச்சியின் பாதையில் செல்கிறோம் என்று மார்தட்டும் மானுடம்

கல்வியறிவு சேர்ப்பதில்,

வாழ்க்கைத் துணை தேடலில் ,

முதிய பெற்றோர் பேணலில் ,

சகோதர உறவாடலில்,

நட்புறவு நாடலில் ,

நீதி நிலை நாட்டலில் ,

நாட்டின் நலம் காப்பதில் ,

எங்கும் எதிலும் கொண்டுள்ளதோ வியாபார நோக்கு.

ஒருவேளை,
இத்தலைமுறை

அன்பு, நேசம், உண்மை , நேர்மை, எனும் உன்னத உணர்வுகளுக்கு

பண்டமாற்றாகவே வளர்ச்சியை பெற்றுக் கொண்டதோ??!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here