32. பொறாமை

0
529

பொறாமை

பேருந்து மகளிர் இருக்கை
தனியளாய் அமர்ந்திருக்க
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய பாவை
அமர்ந்தாள் எனக்கடுத்ததாய்…

ஒரே நொடியில் என்
மனம் கூம்பிப் போயிற்று…

அது பக்கத்து இருக்கையை அவளோடு பகிர்வதால் வந்த முகச்சுணுக்கமா? அல்லவே…

அதுவரை பேருந்துச் சாளரத்தினூடே
சளசளவென பாய்ந்து,
என்னோடு உரையாடிக் கொண்டிருந்த
என் காற்றுக் காதலன் …

இனி அவளையும் தழுவிடுவானே?
என்னோடு பேச மறந்து கொஞ்சம் அவளோடும் பேசிடுவானே?

எனும் ஏக்கம் தந்த மனதின் சலிப்பு…

அடிக்கள்ளி ஏன் கொள்கிறாய் சலிப்பு?
பயணம் முழுக்க உன்னோடுதான் என் பயணிப்பு…
கொஞ்சம் சிரித்திடேன் கலகலத்து…சீண்டினான் அவன்.

உவகையில் அக்கம் பக்கம் எனை பைத்தியக்காரிப் போல பார்ப்பதை பாராதவள் போல,
உரத்து சிரித்துக் கொண்டேன்
என் காற்றுக் காதலனோடு …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here