55. நீ கண்ணுறங்கு _ கவிதை_ ஜான்சி

0
651

நீ கண்ணுறங்கு

நீதி தேவதையே,
நீ கண்ணுறங்கு.

தாமதிக்கப் பட்ட நீதி
தரப்படாத நீதியாம்
அதைக் குறித்து
உனக்கு என்ன?
கவலைக் கொள்ளாமல்
நீ கண்ணுறங்கு.

ஒருவரை ஒருவர்,
ஜாதி, மதம்,
இறை நீதி என்றுச் சொல்லி,
கொன்றுக் குவிக்கட்டும்,
கலங்காமல்
நீ கண்ணுறங்கு.

நிர்பயாக்கள்
வருவதும் போவதும் வழமை.
அவர்களுக்காய் பரிதவிப்பதா
உன் கடமை?
எம் மெய் சிலிர்க்க
நல் விடுதலைத் தீர்ப்பும்,
பரிசாய் பத்தாயிரமும் தந்தாய்.
மகிழ்ந்தோம் (?)
நீ கண்ணுறங்கு.

சில ஆயிரங்கள்
கடன் சுமை
விவசாயியின்
உயிரைப் பறிக்க,
பல கோடி
சுருட்டியோர்
சொகுசில் வாழ,


செயல்படாத கடிகாரம்
போலவே நின்றுப் போய்
பயனற்றுப் போனாய் நீ…


மரித்தவன் போலவே
மீண்டும் எழாமல்
நீ கண்ணுறங்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here