57. வெற்றியின் வாசகம் _ கவிதை_ ஜான்சி

0
622

ஒவ்வொரு நொடியும் கடிகார முள் மட்டும் நகர்கின்றதா?
நம் சுவாசமும் பயணித்துச் செல்கின்றது.
இதயமும் இசை மீட்டி துடிக்கின்றதே?
கைகளும் கால்களும் மட்டும் உழைக்கின்றனவா?
ஆரவாரங்கள் ஏதும் இல்லாமலே,உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும்,
நாம்  நலமே வாழ்ந்திட உழைக்கின்றனவே?
சர்ப்பம் மட்டும் தோல் உரிக்கின்றதா?சரும திசுக்கள் தினம் தோறும் புதுப்பித்து,நம் உடல் எனும் எந்திரம் மிளிர்கின்றது.
அதை அறிவியல் நமக்கின்றுஉரைக்கின்றதே!!
ஆற்றல்கள் ஆயிரம் கொண்டேநாம் வாழ்கின்றோம்.
ஆனாலும், பற்பல நேரஙகளில்…
யானையைப் போன்ற நம் வலிமையை மறக்கின்றோம்.
தோல்விகள், வருத்தங்கள் ஏமாற்றங்கள் தரும்…
அங்குசங்கள் தரும் வேதனைகளில் ம்ருள்கின்றோம்.
அவ்வலிகள் தரும் பாதையில் நடக்கின்ற நாம்,
வாழ்வின் சுவைதனை இழக்கின்றோம்.
“பயத்தை தாண்டினால் வெற்றி” இது விளம்பர வாசகம்.
இதனை கடைப்பிடிக்க அது ஆகுமே…
நம் வெற்றியின் வாசகம்
– ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here