Poem 34. ஆண்(ழ்) மனம் _ ஜான்சி

0
409

ஆண்(ழ்) மனம்

பெண்களை புரிந்துக் கொள்ளமுடியாதாம்…

அவர்கள் உள்ளம் ஆழ்கடலிலும்ஆழமாம்.

இப்படியேச் சொல்லிசொல்லி
ஆண்களேஎத்தனைக் காலம்தான்தம்மையே மறைப்பீர்?

அப்பா முசுடுசிரிக்கவே தெரியாதுஇது நாம்வரையரைத்தது.

பிள்ளைகள் எதிர்காலம் காக்க,
கண்டிப்பின்முகமூடி அணிந்து- அவர் தன்சிரிப்பைத் துறந்ததை
இங்கே யார் அறிந்தது?

அண்ணன் ஒரு கோழை
தங்கையைச் சீண்டியவனை
அறையாமல்,
ஏன்மழுங்கியே போகிறான்?

இது உள்ளத்தில்குமுறலாய் ஒலித்தது.

தன்மானத்தை விட தங்கை மானமே பெரிது,
அமைதியாய் கண்காணிக்க,
அடுத்து செயல்படாமல் தடுக்க,
நட்பு போர்வையே சிறந்தது

எனும் அவன் உள்ளத்தின் உறுதியைஇங்கேயார் அறிந்தது?

கோமாளி நண்பன்
நேரம் காலம் தெரியாமல் பேசும் முட்டாள் அவன்.
என கிண்டல் செய்வது நாம் அறிந்தது.

நண்பர் குழுவில் இருவர் கோபம் கொண்டேச் சூழல் கசப்பாய் மாறுகையில்

அனைவர் கவனம் சிதறடிக்க தன்னைத் தாழ்த்தி
அவன் முட்டாளாய் நிகழ்த்தும் நாடகம்
யார் அறிந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here