Poem 43.பொய்யன் _ ஜான்சி

0
407

பொய்யன்

காத்திருப்பு சுகமென -எவனோ
சொல்லிச் சென்றான்.

அவன் நிச்சயம் பொய்யனாய்
இருக்க வேண்டும்.

தன்னவளை தாமதமாய்
சந்திக்கச் சென்று
தனிமையில் துயருறச் செய்யும்,

கொடூரனாய்
இருக்க வேண்டும்.

இவ்விரண்டும் இல்லையேல்
நிச்சயமாய்

அப்பொய்யன்

எனை நெடு நாள் காத்திருக்க
வைத்திருக்கும் என் காதலனின்

கூட்டாளி நன்பணாகவாவது
இருந்தே ஆக வேண்டும்…

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here