Poem 44. நெடும் பயணம் _ ஜான்சி

0
491

நெடும் பயணம்

நிமிர் நடை
வண்ணக்குப்பிகளாய் -கையில்
மூச்சு சுவாசம் நிரம்பிய பைகள்

எதிரில் நிலா
அதனை நோக்கியதொரு
நெடும் பயணம்.

விடியும் முன்

நிலா அவன் -எனை எதிர்பார்த்து
உருகிக் கரையுமுன்,

நான்

அக்கரை
அடைந்திடல் வேண்டும்.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here