Poem 45. கனவுக் காதலன் _ ஜான்சி

0
433

கனவுக் காதலன் 

அவன் பேச்சு தெரியும்
அவன் அக்கறைகள் புரியும்.

அவன் புன்னகை ,சிரிப்பு அனைத்தும் நான் அறிவேன்.

அவன் ஸ்பரிசம் கூட ஒருமுறை
கனவில் உணர்ந்தேன்.

எம்மிருவர்
உள்ளப் பிணைப்போ எந்தன்

இதயத் துடிப்பு மட்டுமே அறியும்.

ஆயினும், நான்
கூறுவதை யாரும் நம்ப வாய்ப்பில்லை.

நான் காலம் காலமாய் காத்திருக்கும் என்னவனின் முகம் எப்படி இருக்குமென நான்

:heart:

ஒருபோதும் கண்டதில்லை.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here