Poem 46. ஆணவக்காரா _ ஜான்சி

0
357

விலகிப் போனால்
அருகில் வருகிறாய்

ஆணவம் கொண்ட
அடுத்த நொடியே

அடிமையாய் பணிகிறாய்.

கோபம் கொண்டு
முறைக்க முயல்கிறேன் முடியவில்லை.

உந்தன் பலவித பாவம்
பார்த்து உனை கணிக்க முயன்றும்…

கணக்கு தீரவில்லை…

போடா இனி உன்னை நாடி வந்தால் சொல்லு

என முகம் திருப்பவும் விடாமல்
எனை உன்னில் அடக்கிக் கொள்கிறாய்

ஆணவக்காரா…

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here