Review_AIA_Novel_Alamu Palaniappan

0
39
Amizhthinum Iniyaval Aval

ஜான்சியின் “அமிழ்தினும் இனியவள் அவள் ” ஒரு அழகான கிறிஸ்த்துவ குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு. கதை அல்ல , நம் பக்கத்து வீட்டில் நாம் பார்க்கும் மனிதர்கள் தான் கதையின் மாந்தர்கள் .

ராஜன் இந்திரா தம்பதியின் நான்கு பிள்ளைகளும் , அவர்களது அத்தை, ராஜின் சகோதரி சாரா தாமஸ் அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கிடையேயும் இருக்கும் பாசம் , நட்பு, கோபம் இது தான் கதை.

ராஜன், வெளிநாட்டில் வேலை பார்க்கும் கதாநாயகன் ரூபனின் தந்தை. இந்திரா, கணவன் வெளிநாட்டில் வேலைப்பார்ப்பதால் தன் நாத்தனார் சாரா மற்றும் அவர் கணவர் தாமஸ் உதவியுடன் பிள்ளைகளின் பொறுப்பையும் குடும்பத்தையும் அழகாக கொண்டு செல்லும் மனைவி. இவர்களின் இரண்டாவது மகன் ரூபன், சிறு வயது முதல் பள்ளி விடுதியில் வளர்ந்த விதம் மற்றும் யாருடனும் இயல்பாக பழகாமல் எதையும் தனக்குள்ளேயே வைத்து மறுகும் இவன் தான் கதையின் நாயகன் . விடுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறான் .

சாரா மற்றும் தாமஸின் மிகப்பிரியமான மகளான அனிக்கா தான் கதையின் நாயகி. பறக்கும் பட்டாம்பூச்சி அவள், தன் எண்ணங்களாலும், அழகாலும் , துறுதுறுப்பாலும் மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவள் செய்யும் சிறு சிறு செயல்களாலும் , ரூபனின் தம்பி ஜீவனுடன் ஓயாமல் அவள் போடும் சண்டைகளாலும் ரூபனி்ன் மனதில் சிறிதாக நுழைந்து பின்னர் அவன் இதயத்தில் ஆழமாக இடம்பெற்று விடுகிறாள் .

அவனது காதலை தெரிந்து கொண்ட ஜீவன் அண்ணனை மிரட்டுவதும் அனிக்காவின் மேல் அக்கறை எடுத்து ஜீவன் பேசுவதும் அழகு. ரூபன் காதல் சொன்ன தருணத்தில் ஆரம்பிக்கிறது பிரச்சனை வில்லன் மூலம் . அழகாக தன் சாதுர்யத்தால் எவ்வாறு அனைத்தையும் கடந்து , விருப்பமில்லாத அவள் தந்தையும் கூட விருப்பம் கொள்ளும் வகையில் ரூபன் எவ்வாறு திருமணத்தை நடத்துகிறான் என்று அழகாக சொல்லியுள்ளீர்கள் ஜான்சி.

” பல நேரங்களில் எல்லோரும் அவரவர் இடத்தில் சரியாக இருந்தும் எல்லாமே தவறாகக் போய்விடக்கூடும் ” இந்த வார்த்தைகள் ஜான்சியின் வார்த்தைகள் தான் . இதுதான் கதையின் கரு.

எனக்கு சில கிறிஸ்துவ தோழிகள் இருந்தாலும் அவரகள் இல்லத்திருமணத்திற்கு சென்றிருந்தாலும் கூட இவ்வளவு அழகா ஒரு திருமணத்தையாவது பார்த்தேனா என்று தெரியவில்லை. நீங்கள் அழகாக சொல்லியிருந்த விதத்தில் ஒரு திருமணத்திற்கு சென்று வந்த நிறைவு இருந்தது. உங்களவர்களின் உடைகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றியும் தெரிந்துகொண்டோம் பா .

ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தை அருகிருந்து பார்த்த எண்ணம் .

வாழ்த்துகள் ஜான்சி மிக்கேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here