Review_IIAO_Novel_Writer Sudha Ravi

0
19

இது இருளல்ல அது ஒளியல்ல – ஜான்சி மிக்கேல்

என்ன சொல்ல…படித்து முடிக்கும் வரை மன அழுத்தத்தில் மூச்சு திணறல் வந்து விட்டது. எத்தனை காலம் தான் இது போன்ற வலிகளை சுமப்பது?

2020 வரை வந்த பின்பும் பெண்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை…திருமண விஷயம் என்று வரும் போது எத்தனை விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்?

பணம் மட்டுமே வாழ்வின் ஆதாரமாகி விட முடியுமா? அந்தப் பெண் அனுபவித்த வலியும் வேதனையும் காலத்தினால் மறைந்தாலும் அவள் மனதில் உறங்கி கொண்டு தானே இருக்கும்.

எனது கல்லூரி தோழி இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்தாள்…ஆனால் இரண்டாவது திருமணத்திலும் அவளுக்கு மீண்டுமொரு சைக்கோவிடம் சிக்கினாள்…அதிலிருந்து அவளை மீட்பதற்கு அவள் குடும்ப பட்ட கஷ்டங்கள் என் கண் முன்னே வந்து போனது.

அருமையான கரு ஜான்சி அதை கொடுத்த விதமும் நன்றாக இருந்தது..
எனக்கும் டயலாக்ஸ் ஒரு சில இடங்களில் இருந்திருந்தால் மேலும் அழுத்தத்தை ஏற்றி இருக்கும் என்று தோன்றியது…அதிக பக்கங்கள் இல்லாமல் நச்சென்று கொடுத்திருக்கீங்க…மனமார்ந்த வாழ்த்துகள் ஜான்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here