Review_Naayagi_Novel_Writer Thooval Naruvi

0
14
Naayagi Jansi Rani

நாயகி..!!

மணிக்கு ஒருதரம் செய்தியாக படித்தோ பார்த்தோ பரிதாபப்பட்டு கோபப்பட்டு ஷேர் செய்து பார்வர்ட் செய்து கடந்து செல்லும் செய்தி..!!

பாலியல் வல்லுறவு..!!

நமது நாயகியும் செய்தியாய்..!!

“பெண் பிள்ளை இப்படித்தான் இருக்கனும்..”, பெற்றோர்கள் வகுத்துக்கொடுக்கும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவளுக்கு கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்கான வழி என்பதில் அத்தனை திண்ணம்..!!

அதற்காக போராடவும் செய்கிறாள்..!!

கல்வியெனும் மரத்தில் கொடியாய் இவள் படர்ந்து கல்லூரிக்குள் சுதந்திரத்துடன் காலடி எடுத்துவைக்க.. காதலெனும் போர்வையில் பூச்சியொன்று பிரசன்னாவின் வடிவில் பெண்ணவளை சீண்டுகிறது..!!

நானலாய் இவள் அவனிடமிருந்து விலகிச் செல்ல முயல.. ஒரு கட்டத்தில் அவன் ஆதிக்கத்தால் கருகிப்போகிறாள்..!!

நாயகி இதிலிருந்து மீண்டாளா..?? அவளை செய்தியாக்கியவனுக்கு தண்டனை கிடைத்ததா..??

நாயகியை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்..!!

வாழ்த்துக்கள் ஜான்சி அக்கா..!!

அருமையான முயற்சி..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here