Review_Neeyum Naanum_Novel_Aparna Ganapathy

0
25
Neeyum Naanum

“ஹய்யா நானும் இப்படி சொல்லிருக்கேனே!!!, ஆமாம் நானும் இந்த கிருக்குதனத்தை செய்த(வ)துண்டு, ஏ இந்த எழுத்தாளர் என்ன என் மனசுக்குள்ள cctv வெச்சு பார்த்தாங்களா என்ன?” என்று நம்மோடு ஒன்றி, நம்மையும் கதையில் கதாபாத்திர பிம்பத்தில் காண வைக்க..ஒரு சில எழுத்தாளர்களாலே அந்த மாயாஜாலத்தை செய்ய முடியும்.. அப்படி பாதித்த ஒரு கதை தான் ஜான்சி மிக்கேல் அவர்களின் “நீயும் நானும்”..

கணிணியை கைபிடித்த , மன்னிக்கவும். கணிணியில் வேலைபார்த்து கன்னியை கைபிடிக்கும் காளைகளுக்கும் .. கணிணி மயமாய், ரோபோட்டாய் போன கண்ணான கணவனை வரமாய் பெற்ற கண்மணிகளுக்கும் இக் கதையில் தங்களை பிரதி பிம்பமாய் காண்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!!

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், இருவரின் கலந்தாய்வு. காதல் , கூடல், ஊடல் என்பதை தாண்டி , ஹலோ எஃக்யூஸ் மீ மே ஐ கம் இன், என்று தம்பதிகளின் உளவியல் உள்குமறல்களை படம்பிடித்து காட்டி அவர்களோடே நம்மையும் பயணிக்க வைத்ததில் எழுத்தாளர் வித்தியாச பட்டு நம்மையும் விவேகமாய் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் ,என்னை பொறுத்தவரை..

கணவன் தனக்கென நேரம் ஒதுக்கவில்லை, தொலைக்காட்சியே தொல்லைக்காட்சியாய் மாறிய அவலம் ஏனோ?, தனிமை.. முடி சூடா ராணியாய் இருந்தாலும் தனித்தீவு ராணி.. என்ன பெரிய வேலை , உலகத்துல இவங்க மட்டும் தான் வேலை செய்யறாங்க போல.. நம்மள நினைக்கறதே இல்ல, நாம அனுப்பற குறுந்தகவலுக்கு பதில் அனுப்பவில்லை..நம்மள உடலளவிலே நாடுகிறாரோ? நமது உடல்,மன வலி மீது அக்கறை உண்டா? நாம் இவரை மணந்தது சரி தானா? இந்த கேள்வியை இந்த கதையின் நாயகி கோமுவை போல் நம்மில் பலரும் நம்மிடமோ, நம் நண்பரிடமோ கேட்டிருப்போம்…. ஆனால் நாணயத்தின் மறுபக்கம் என‌ என்றாவது ஆண்களின் காலுரைக்குள் நின்று பார்த்ததுண்டா? இக்கதை வாசிக்கும் போது நின்று பார்ப்பீர்கள்… அப்போது அவர்களின் பளு நிறைந்த ஸோ கால்ட் ஓயிட் காலர்ட் ஐடி ஜாபின் கோர முகம் நம்மை பார்த்து பல்லிளிக்கும்.. சீரியலில் மாமியார் நாத்தனார் கொடுமையை கண்டு பொங்கும் நாம் ஆயிரம் தேள்களாக கொட்டும் மேனேஜர்,டீ.எல் களின் கொடுக்கில் சிக்கியும், திறமையிருந்தும் தட்டிவைக்க படும் நம் கணவன்மார்களின் வலிகளை என்றாவது உணர்ந்துள்ளோமா ?ஐடி கணவனை மணந்த பெண்கள்???

எஸ்கலேஷன், டிக்கெட் ரைஸிங், அப்ரைஸல் என்று பழக்கப்பட்ட வார்த்தைகளின் வீரியத்தின் அளவை அழகாக சொல்லி இருக்கீங்க..

கணவன் நைட் ஷிஃப்ட், மனைவி டே ஷிஃப்ட் கண்கலக்க நேரமின்றி, கண்ணுறங்கும் அழகை உள்ளிழுத்து கொண்டு அலுவலகம் செல்லும் அவலம் சொல்லி மாளாது…அதை கோமு, ராமுவின் மூலம் நேர்த்தியான வகையில் நம்மையும் ,சே பாவம் என்ன வாழ்க்கை டா இது என கேக்கவைக்கறாங்க..

நிறைய இடத்தில் நறுக்கான வசனங்கள்..
நீயும் நானுவுக்கும், நானும் நீயும் க்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று தானே நினைப்போம்.. பொருள் பொதிந்த வித்தியாசமுண்டு என சொன்ன விதம், நமக்குள் எழும் சில கேள்விகளான

பேசாம வேலைய ரீஸையின் பண்ணிட்டு புருஷனை பார்க்க வேண்டியதானே , எதுக்கு தலைவனை காணா தலைவி போல் பசலை? என்ற கேள்வி..

என் சம்மதம் இன்றி எப்படி என்னை தீண்டலாம் என்ற கேள்விக்கு, ஆமா இது பெரிய விஷயம் என்னமோ நம்மள மனுஷியாக நினைச்சு நடக்கற மாதிரி, அட போம்மா இது எல்லாம் கதையில டையலாக்கா படிக்க வேணா நல்ல இருக்கும் நிஜத்துல இப்படி கேட்டா பெரிய பல்பு தான் கிடைக்கும்ன்னு தானே நாம கேட்போம் அதுக்கு ஆசிரியர் நாயகி மூலமே ஒரு பதில் சொல்லிருப்பாங்க சுளிருன்னு புத்தில உரைக்கும் , அட ஆமாம்ல இதை பதமா சொல்லிருக்கலாமோ என தோணும்..

மனைவியின் வலியை உணரும் கணவன், கணவனின் நிலைமையை உணரும் மனைவி, கிடைச்சா அந்த வாழ்க்கை வரம் தானே!!?

நல்ல ஒரு கதை படிச்ச திருப்தி, வாழ்த்துகள் ஜான்சி அக்கா. முத்தங்கள், மோகங்களை தாண்டி, வாழ்க்கையும் இருக்கு அதுக்கு மனதால் நீயும் நானுமாய் மட்டும் அல்லாமல் நாமாய் நிக்கணும்ன்னு அருமையா சொல்லியிருக்கீங்க!!!!.. இக்கதை போட்டியில் வெற்றி பெற என் மனம் கனிந்த வாழ்த்துகள் 💐..

https://www.sudharavinovels.com/threads/நீயும்-நானும்-கதை-திரி.255/page-2 ( with permission from the author)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here