தமிழ் வழி ஹிந்தி கற்கலாம்
பாடம் 1:
நட்புக்களே,
இன்று முதல் நம் தமிழ் வழி ஹிந்தி கற்பித்தல் பாடங்கள் தொடங்குகின்றன. இடையறாமல் இக்கற்பித்தல் தொடர இறையருள் புரியட்டும்.முதலில் நாம் ஹிந்தி மொழி குறித்த சில விபரங்களை அறிந்துக் கொள்ளலாம்
1.1 ஹிந்தி எழுத்துரு:
தற்போது பாவிக்கப் படும் ஹிந்தி எழுத்துருவானது Devnagari ‘தேவ்நகரி’ என அழைக்கப் படுகின்றது.
தமிழில் உள்ளது போல உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் ஹிந்தியிலும் உண்டு. சொல்லப் போனால் தமிழ் மொழிப் போலவே ஹிந்தியிலும் பெரும்பாலான எழுத்து அமைப்புகளும் உச்சரிப்புக்களும் இருப்பதைப் பாடங்கள் செல்லச் செல்ல நீங்கள் அறிய நேரிடலாம்.
ஹிந்தியின் 12 உயிரெழுத்துக்கள் ஸ்வர் (Swar) எனவும், 33 மெய்யெழுத்துக்கள் வியஞ்சன் (vyanjan) எனவும் அழைக்கப் படுகின்றன. உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் கூடவே மூன்று கூட்டெழுத்துக்களும் (compound letters) உள்ளன. கூட்டெழுத்துக்கள் என்பன இரு எழுத்துக்கள் கூட்டாகச் சேர்த்து உருவாகும் எழுத்தாகும். உதாரணத்திற்குத் தமிழ் வார்த்தை ‘ஸ்ரீ’ எனக் கொள்ளலாம்.
1.2 Hindi letters ஹிந்தி எழுத்துக்கள்:
ஹிந்தி எழுத்துக்களின் தொகுப்பை ‘வர்ணமாலா’ वर्णमाला என்று அழைக்கின்றனர்.

பகுதி வாரியாக இவற்றைக் காண்போம்.
ஸ்வர் स्वर ( உயிரெழுத்துக்கள்):
முதலில் நாம் கற்கவிருப்பது ஹிந்தி உயிரெழுத்துக்கள். இவற்றை ‘பாரா கடி’ Baarah kadi बारहखड़ी அதாவது பன்னிரெண்டு எழுத்துக்களின் கண்ணி என அழைக்கின்றனர்.
1.अ (a) – அ
2.आ (aa) – ஆ
3.इ (i) -இ
4.ई (ee). – ஈ
5.उ (u) – உ
6.ऊ (oo) – ஊ
7.ए (ye) – எ/ஏ
8.ऐ (ai) – ஐ
9.ओ (o) – ஓ
10.औ (au) -ஔ
11.अं (am)- அம்
12. अ: (aha)- அஹ
மெய்யெழுத்துக்கள் வியஞ்சன்:

36 மெய்யெழுத்துக்களைப் படத்தில் காண்க. அடுத்தப் பாடங்களில் இவற்றைக் குறித்த விரிவாக்கத்தைக் காணலாம். இப்போது இவை குறித்துச் சில விபரங்களை மட்டும் அறிவோம்.
தமிழ்மொழியோடு ஹிந்தி மெய்யெழுத்துக்களை ஒப்பிட்டால் மிக அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. இந்தப் படத்தில் 33 மெய்யெழுத்துக்கள் உள்ளன.
அ. முதலில் நாம் கவனித்தோமானால் ’ க’ என்னும் எழுத்தே நான்கு விதமான உச்சரிப்பில் காண கிடைக்கின்றது.
क ka
ख kha
ग ga
घ gha
ஆ. அடுத்து ‘ந’ வென ஒலிக்கும் அதிகமாகப் பயன்படுத்தப் படாத எழுத்து डृ
இ. அடுத்து ‘ச’ எழுத்தின் நான்கு வகைகள்.
च cha
छ chha
ज ja
झ jha/za
ஈ. அடுத்த எழுத்தும் அதிகம் உபயோகத்தில் இல்லாத ஒன்று ‘க்ங’
5.அடுத்து வருவது ‘ட’ வின் நான்கு வகைகள்.
ट ta
ठ tta
ड da
ढ dha
- அடுத்த எழுத்து ण இதன் உச்சரிப்பு ‘ண’ பொதுவாக ஹிந்தியில் இந்த எழுத்து/ உச்சரிப்பு அதிகம் உபயோகத்தில் இல்லை .
(துணுக்கு: இந்த ‘ண’ உச்சரிப்பு மராத்தி மொழியில் அதிகமாக உபயோகிக்கப் படுகின்ற ஒன்றாகும் )
- அடுத்த நான்கு எழுத்துக்கள் ‘த’ உச்சரிப்புக்கள் கொண்டவை.
त ta
थ tta
द da
ध dhha - न இந்த எழுத்து ந/ன என உச்சரிக்கப்படும்.
- அடுத்து வருவன 4 வகை ’ ப’ எழுத்துக்கள் .
प pa
फ fa
ब ba
भ bha - அடுத்த எழுத்து म ‘ம’
- அடுத்த நான்கு எழுத்துக்களும் முறையே ய, ர, ல, வ
य ya
र ra
ल la
व va
- அடுத்த மூன்று எழுத்துக்கள்
श sha ஸ
ष sa ஷ
स sa ஸ
13.கடைசி எழுத்து நாம் அடிக்கடி சிரிக்க உபயோகப் படுத்துவது
வேறொன்றுமில்லை ‘ஹ’ ह
இப்போது நாம் மெய்யெழுத்துக்களைக் கற்றுக் கொண்டுள்ளோம் .விடுபட்ட மூன்று மெய்யெழுத்துக்கள் அடுத்தப் பாடத்தில் சேர்க்கப் பட உள்ளன.
இவற்றின் உச்சரிப்பின் வேறுபாடுகளை அறியும் போது தான் நாம் இவற்றைச் சரியாக பயன்படுத்த இயலும்.
Additional information:மெய்யெழுத்து ( அரை மாத்திரை அளவு):

Consonants :
தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் ( க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்) உள்ளது போலவே அரை மாத்திரை அளவு ஒலிக்கும் ஹிந்தி மொழி மெய்யெழுத்துக்களை அவற்றின் உச்சரிப்பை படத்தில் காணுங்கள்.
இவைதான் உண்மையான ஹிந்தி மெய்யெழுத்துக்கள்.
ஆனால், ஹிந்தி பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் போது ஏனோ நடைமுறையில் இந்த மெய்யெழுத்துக்களை யாருமே கற்றுக் கொடுப்பதில்லை.
ஒரு மாத்திரை அளவிளான ‘க்+அ=க ’ போன்ற உயிர் மெய்யெழுத்துக்களையே மெய்யெழுத்துக்கள் எனக் கற்றுக் கொடுக்கிறார்கள். காரணம் நான் அறியேன்.
நாம் தமிழ் வழியாக ஹிந்தி கற்பதால் குழப்பம் நேரிட கூடாது என்பதற்காக இந்தப் பாடத்தை சேர்த்துள்ளேன்.
‘க்’ எனும் எழுத்தை ‘க’ வாக ஆக்க வேண்டுமானால் நாம் அதன் ’ தலை மேல் இருக்கும் புள்ளியை எடுத்து விடுகின்றோம் சரிதானே?
அப்படியானால் ஹிந்தியில் அரை மாத்திரை ‘க்’ எழுத்தை ஒரு மாத்திரை ‘க’ வாக மாற்றும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அந்த எழுத்துக்களுக்குக் கீழே நீட்டிக் கொண்டிருக்கும் கோட்டை () நீக்கி விட வேண்டும்.
கூட்டெழுத்துக்கள் மற்றும் சில பல மிகுதியாய் இருக்கும் எழுத்துக்களுக்கான விபரங்களை அடுத்தப் பாடத்தில் காண்போம். வாரத்திற்கு ஒரு முறையாகினும் பாடம் பதிக்க முயலுகின்றேன்,
உங்கள் சந்தேகங்களைக் கமெண்டில் தெரிவிக்கலாம்.
நன்றிகள்.
-ஜான்சி