2. ஹிந்தி= தமிழ் வார்த்தைகள்

0
534

வணக்கம் நட்புக்களே,

முதல் பாடத்திற்கு யாருமே பதிலளிக்கவில்லை. கோபமாக/வருத்தமாக இருக்கிறேன் என்று சொல்லத்தான் நினைக்கிறேன். அதெல்லாம் நம்மக்கிட்ட ஸ்டாக் கிடையாதே என்று மனம் இடித்துரைக்கின்றது.

கோபம் வருத்தம் எதுவும் இல்லை ஆனால், கொஞ்சமே கொஞ்சம் உற்சாகம் குறைவு பட்டுவிடுகின்றது.

ஆனால், இனி “கடமையைச் செய், பலனை (உடனே) எதிர்பாராதே” எனும் மன நிலையோடு பாடங்களைப் பதிவிட உள்ளேன்.

புரியாத பட்சத்தில் தயை கூர்ந்து கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். நன்றிகள்.

இன்றைய பாடத்திட்டம்:

 1. முந்தைய பாடத்திற்கான பதில்கள்
 2. இரெண்டாவது பாடத்திற்கான வார்த்தைகள்.
:slight_smile:

வணக்கம் 

 • ஜான்சி

1. முதல் பாடத்திற்கான விடைகள்:

 1. अक्रम
  Akram ( lawlessness/ improper)
  அக்ரம்
:frowning:

தமிழ் வார்த்தை: அக்கிரமம் = அநீதி
வாக்கியம்: என்னமா அக்கிரமம் செய்யறாங்க? இது கடவுளுக்கே அடுக்குமா 


 1. 2. अहंकार
  Ahankaar ( ego)
  அஹங்கார்

தமிழ் வார்த்தை: அகங்காரம்= ஆணவம்
வாக்கியம்: அந்த மனுசன் ரொம்ப அகங்காரம் பிடிச்சவன்/ அவ ரொம்ப அகங்காரி


 1. 3. अगति
  Agathi ( கதியற்றவன்)
  அகதி

தமிழ் வார்த்தை: அகதி – ஆதரவு அற்றவன்
வாக்கியம்: அந்தப் பெண்கள், குழந்தைகள் எல்லாம் அந்த நாட்டு போர் அகதிகள்.


 1. 4. अग्नि
  Agni ( Fire)
  அக்னி

தமிழ் வார்த்தை: அக்னி= தீ
வாக்கியம்: திருமணத்தில் மணமக்கள் அக்கினியை சுற்றி வந்தனர்.


 1. 5. अकाल
  Akaal ( Un timely)
  அகால

தமிழ் வார்த்தை: அகால = பருவத்திற்கு முந்தின
வாக்கியம்: அகால வேளையில் எழுந்தாள்.\ அகால மரணமடைந்தார்.


மிக எளிதான வார்த்தைகள் தானே?

இவற்றில் ஏதேனும் சந்தேகம் உண்டா?

நாம் ஹிந்தி கற்றுக் கொள்வதோடு கூட எவையெல்லாம் தமிழ் வார்த்தைகள் அல்ல என்றுக் கற்றுக் கொள்ளவும் இந்தப் பகுதி உதவுகின்றது அல்லவா?

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்

ஹிந்தி = தமிழ் வார்த்தைகள்:

வீட்டுப் பாடம்: கிழே கொடுக்கப் பட்டுள்ள சமஸ்கிருத / ஹிந்தி வார்த்தைகளைப் போல் உள்ள் தமிழ் வார்த்தைகளைக் கண்டு பிடித்து அதே பொருள் தரும் சரியான தமிழ் வார்த்தை என்ன? எனக் குறிப்பிடுங்கள். அவ்வார்த்தைக்கு ஏற்ப ஒரு வாக்கியம் அமைக்கவும்.


 1. 6. अखिल

Akil (world)

அகில்- அகிலம்


 1. .7 .अंग

Angh(limb)

அங்க் –அங்கம்


 1. 8 ___( அங்கி) {பி. கு: சரியான ஹிந்தி ஸ்பெல்லிங்க் கிட்டவில்லை. தேடி சேர்க்கின்றேன்}

angi ( Apron)

அங்கி


 1. 9 अंगीकार

Angikaar (Authentication)

அங்கிகார்- அங்கீகாரம்


 1. 2.0 अंकुश

Ankush (Hook)

அங்குஷ் = அங்குசம்

மீதி வார்த்தைகளோடு சந்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here