2. Hindi Lesson

0
380

பாடம் 2

இன்றைய பாடத்திற்கு முன் செல்லும் முன்னதாக முதல் பாடத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நட்புக்களே.

அந்த ஆர்வத்தில் தான் இரண்டாவது பாடத்தை இன்று பதிவிடும் உற்சாகம் எழுந்தது. நன்றிகள்.

பாடம் ஆரம்பிக்கும் முன்பாக ஒரு விஷயம் சொல்ல விருப்பப் படுகின்றேன். ஹிந்தி மொழி மிகவும் கலப்படமான மொழி மட்டுமல்ல, தமிழைப் போல எல்லோரும் ஒரேயொரு வரையரை வைத்து உபயோகிக்கும் மொழி அல்ல.

கூகிளில் நீங்கள் தேடினால் ஒரு தளத்தில் சொல்வதற்கும் மற்றொரு தளத்தில் சொல்வதற்கும் நிறைய மாறுதல் இருக்கும். பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். எங்களுக்குப் பள்ளியிலேயே உபயோகத்திற்கு உட்படாத எழுத்துக்களை ஒரு நாள் வகுப்பில் கற்றுக் கொடுப்பதோடு சரி அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

நான் பகிரும் பாடங்கள் பல்வேறு அலசல்களைத் தாண்டியே உங்களிடம் வந்து சேர்கின்றது. வித்தியாசமான கருத்துக்களைப் பார்க்கையில் கூகிளில் மட்டுமல்லாது பொழிப்புலமைப் பெற்ற அருகாமையிலுள்ள ஹிந்தி மராத்தி டீச்சரிடம் கலந்து கேட்டுக் கொள்வதும் தான். இது தவிர்த்தும் ஏதேணும் முரணாகத் தோன்றினால் தெரியப் படுத்துங்கள். ஆராய்ந்து விளக்கம் அளிக்கின்றேன்.

தொடர்ந்து பாடங்களை வாசித்துப் பயனடைய வாழ்த்துகள்.

2.1 Revision:

இப்போது ரிவிஷன் டைம்.

பொதுவாக நம் மக்கள் ஹிந்தி எழுத்துக்களைக் கற்றுக்கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை என்பதைக் கடந்த 2 வருடங்களாக முக நூல் பக்கம் நடத்தும் போதிலிருந்தே நான் அறிந்த ஒன்றே. ஆனால், எழுத்துக்களை அறியாதவர்கள் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கற்றுக் கொள்வது எப்படி?

:wink:

புது எழுத்து வடிவங்களைப் பயில்வது நிஜமாகவே கொஞ்சம் கடினமானது தான். என்னுடைய நண்பர்கள் நான் தமிழ் எழுதுவதைப் பார்த்தால் எவ்வளவு கடினமான மொழி உன்னுடையது…” ஜிலேபி மாதிரி இருக்கிறது. இதை எப்படிப் படித்தாய்?” என்று என்னிடம் ஆச்சரியப் படுவார்கள்”…அதைக் கேட்கையில் எனக்கும் சிரிப்பாகவே இருக்கும்.
நமது மொழி அவர்களுக்கு ஜிலேபி என்றால் அவர்கள் மொழி நமக்கும் ஜிலேபி மாதிரி தானே  ?

எந்த ஒரு புது விஷயமுமே புரிய வருகின்றவரை எல்லாம் அப்படித்தான் இல்லையா? விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனச் சொல்லிக் கொண்டு : P ஹி ஹி…

:stuck_out_tongue:

எனக்குத் தெரிந்த வரை கொஞ்சம் எளிமையாக எழுத்துக்களின் அமைப்பை புரிய வைக்க முயன்றிருக்கின்றேன். (இதுக்கு முன்னாடி வரை நல்லா தான் புரிஞ்சது உன்னோட எக்ஸ்பிளேனேஷன் கேட்ட பிறகு ஒன்னுமே புரியாம போயிடுச்சு அப்படி நினைக்கிறவங்க இந்தப் பக்கம் வர வேண்டாம்  )

Ready…Steady… போ…

:stuck_out_tongue:

முதலில் ஹிந்தி வார்த்தைகளைக் கவனித்தோமானால் எல்லா வார்த்தைக்கும் மேலே ஒரு கோடு உள்ளது கூரை மாதிரி (  ) சரிதானே… இவை எல்லா எழுத்துக்களிலும் வரக் கூடியவை. இதை நான் கீழ் வரும் பாடங்களில் சொல்லிக் கொடுக்கப் போவதில்லை. மற்ற அமைப்பை மட்டும் பார்ப்போம்.

இந்தக் கூரை அமைப்பு எழுதுவதற்கு மிகவும் முக்கியமானது எழுத ஆரம்பிக்கும் போது அதனைத் தொட்டே எழுத்துக்கள் ஆரம்பிக்கப் படவேண்டும்,

1.अ (a) – அ: குறில் எழுத்து ஹிந்தி “அ” எழுதுவது மிகச் சுலபம். இதைக் கணிதம் கொண்டு கற்கலாமா? முதலில் எண் “3” ஆதன் பின்னால் மைனஸ் சைன்” -” அதன் பின்னால் நீளவாக்கில் கோடு “I”…இதோ நமக்கு கிடைத்து விட்டது ஹிந்தி அ ie., अ

2.आ (aa) – ஆ– நெடில் …அ விலிருந்து ஆ வென நெடில் ஆக்குவது மிகவும் சுலபம் இந்த எழுத்தின் பின்னால் இன்னொரு நீளவாக்கின் கோட்டை ie., “I” இணைத்து விட்டால் போதும். இதே விதிமுறையைத் தான் நாம் உயிர்மெய் எழுத்துக்கள் கற்கும் போதும் பயன்படுத்த போகிறோம்.இதோ ஹிந்தி ஆ “आ “

3.इ (i) -இ : குறில் இ எழுதுவது இன்னும் சுலபம், ஆங்கில எழுத்து S ஐ மனதில் கொண்டால் போதும். ஒரு சின்னக் கொம்பு வரைந்து S எழுதி முடிக்கும் போது சுழித்து விட்டால் போதுமே. इ

:stuck_out_tongue:

4.ई (ee). – ஈ : நெடில் ஈ எழுத குறில் इ யின் தலையில் அதாவது கூரைக்கு மேலே  ஆங்கில எழுத்து c கோணத்தில் சுழித்து விட வேண்டும். முன்பே குறிப்பிட்ட மாதிரி ஆங்கில C கோணத்திலான சுழிப்பாக இருந்தாலும் கூரையைத் தொட்டே எழுத ஆரம்பிக்கப்படவேண்டும். அதாவது கீழிருந்து மேலே…

5.उ (u) – உ-: குறில் உ எழுதுவது மிகச் சுலபம் . ஆங்கில எண் 3 ஐ கொஞ்சம் முன் பக்கமாக இழுத்து எழுதி முடிக்க வேண்டும். उ

6.ऊ (oo) – ஊ: நெடில் ஊ எழுத குறில் उ இன் முதுகு பகுதியில் கீழ் பகுதி வரும் படி சுழித்தல் போதுமானது. ஈஸிதானே? ऊ ( இது யானைக்கு வால் போல இருக்கின்றது கவனித்தீர்களா ஹி ஹி)

7.ए (e) – எ: எ எழுத நீள வாக்கில் ஒரு கோடு “I” அதை வலது பக்கமாகச் சுழிக்கவும். அருகில் ஒரு சிறு கோடு வரைந்து உட்புறம் சற்று வளைத்து விடவும். இரண்டும் ஒட்டக் கூடாது. ए

:wink:

8.ऐ (ai) – ஐ : ए வின் கூரை மேலே (  ) இடது புறமாக சுழிக்க வேண்டும். ऐ

9.ओ (o) – ஓ: ஓ எழுதுவது மிகச் சுலபம் … முதலில் ஆ எழுதியிருந்தோமே…आ அதில் இரண்டாவது கோட்டின் மேல் ஆரம்பித்து இடது புறமாகச் சுழிக்கவும். ओ

10.औ (au) -ஔ: ஔ எழுத ஆ அதாவது आ எழுத்தின் இரண்டாவது கோட்டின் மேலாக இடது பக்கம் நோக்கி இரண்டு முறை சுழிக்கவும். औ

11.अं (am)- அம் : குறில் அ ie., अ மேல் ஒரு புள்ளி வைக்க இவ்வெழுத்து “அம்” என்று உச்சரிக்கப் படும். अं

12. अ: (aha)- அஹ : குறில் அ ie., अ பக்கவாட்டில் இரு புள்ளிகள் (: colon) வைக்க அவை “அஹ” வென உச்சரிக்கப் படும்.अ:

இவை ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இவற்றில் பயன்படுத்தும் அத்தனையும் நாம் இன்னும் வரும் பாடங்களில் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். எழுதி பயிற்சி செய்தால் உங்களுக்கு நியாபகபடுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

:stuck_out_tongue:
:wink:
:point_right:
:point_right:

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா  

பின் குறிப்பு:

கீழ் குறிப்பிட்ட கருத்தானது நான் முகவுரையில் குறிப்பிட்டதைப் போல ஒரு மாற்றுக் கருத்தாகும். இதைக் குறித்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

Vowels:

Hindi alphabet have ten vowels and two modifiers which are given below. The symbols shown below the alphabets are known as “matra” symbols. Matra symbols are used when consonants and vowels are to be written together.

மேலே 1 முதல் 12 வரையில் நாம் கற்ற எழுத்துக்களில் 11 & 12 ல் ‘.’ மற்றும் ‘:’ இந்த symbol இருந்ததால் இவற்றை ‘ மாத்ரா’ என்றுதான் அழைக்க வேண்டும் எனவும் அவை உயிரெழுத்துக்களில் சேராது எனவும் இந்தக் கருத்துக் குறிப்பிடுகின்றது.

ஆனால், ‘இவை 12 மே நடைமுறையில் உயிரெழுத்துக்கள் என்றே பாவிக்கப் படுகின்றன.

2.2 Queries & Replies:

நேற்றைய பாடத்தில் இருந்து 2 கேள்விகள் வந்துள்ளன. கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் கீழே,

கேள்வி 1.ரதி நிவின்: அரை மாத்திரை குறித்துக் குழப்பமாக இருக்கின்றது?

பதில்: மாத்திரை அளவு ( ஹிந்தியில் ‘மாத்ரா’) என நாம் தமிழில் குறிப்பிடுவது ஓர் எழுத்தின் உச்சரிப்பைப் பொருத்தது. எல்லா மொழியிலும் இவை ஒரே மாதிரியான பொருள் தருகின்ற ஒன்று.

உதா:

ல்- அரை மாத்திரை
ல்+அ= ல- ஒரு மாத்திரை
ல்+ஆ= லா- இரெண்டு மாத்திரைகள்

ச், ச , சா/ ம், ம, மா/ க், க, கா

இதுவும் புரியவில்லை என்றால் தெரியப் படுத்துங்கள்.

முதல் பாடத்தில் ஹிந்தி உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் கற்ற போது பொதுவாக தமிழில் உயிர் எழுத்துக்கள் ‘அ –ஔ’ ஹிந்தியிலும் இது போலவே இருந்தது அல்லவா?

தமிழில் மெய் எழுத்துக்கள் ‘க் – ன்’ அஃதாவது அரை மாத்திரை எழுத்துக்கள். ஆனால் ஹிந்தியில் கற்ற எழுத்துக்கள் ‘க – ஹ’ ஒரு மாத்திரை அளவு உச்சரிப்புக் கொண்டவைகள்.

இந்தப் பாடம் பயில்பவர்களுக்கு அது எப்படி உயிர் எழுத்து அரை மாத்திரை அளவு இல்லாமல் ஒரு மாத்திரை அளவு இருக்கின்றது? என்கின்ற குழப்பம் நேர்ந்து விடக் கூடாதென்பதற்காக அதிகமாகச் சேர்த்த பாடம் அது. அதுவே, உங்களை இன்னுமாகக் குழப்பி விட்டது போலும்.

கேள்வி 2: கோகிலா பால்ராஜ்: 12 வது பகுதி (12. அடுத்த மூன்று எழுத்துக்கள்
श sha ஸ
ष sa ஷ
स sa ஸ
) இரெண்டு எழுத்துக்கள் श sha ஸ
** மற்றும் स sa ஸ இரெண்டின் உச்சரிப்பும் ஒன்றாகவே இருக்கின்றதே? எப்படிப் புரிந்து கொள்வது?**

பதில்: ஹிந்தியில் இப்படி ஒரே மாதிரியான உச்சரிப்புகள் கொண்ட எழுத்துக்கள் பல ( க/ச/த மாதிரி) உள்ளன. வார்த்தைகள் பழகும் போது இவற்றின் வித்தியாசம் நான் கற்றுத் தருகின்றேன். இப்போது உச்சரிப்பை மற்றும் கற்றுக் கொள்ளுங்கள்

2.3 Consonents Lesson continuation.

கடைசி மூன்று ஹிந்தி மெய்யெழுத்துக்களை குறிப்பிட இந்த பாடம். அவற்றின் உச்சரிப்புக்களை கீழே காண்க. இவை அதிகமாக பயன்பாட்டில் இல்லாத பெய்யெழுத்துக்கள் ஆகும். ஆக, நாம் ஏற்கெனவே கற்றுக் கொண்ட 33 மெய்யெழுத்துக்களோடு இவைகளையும் சேர்த்தால் மொத்தம் 36 மெய்யெழுத்துக்கள்.

क्ष க்ஷ
त्र த்ர
ज्ञ ங்க்ய

2.4 Dot Consonants:

இவை ஹிந்தி மொழியில் பொதுவாக உருது வார்த்தை உச்சரிப்புக்கள் வரும் போதோ, வழக்கமான உச்சரிப்பை விட அழுத்தமாகவும் சற்று ‘ஹ’ சேர்த்து உச்சரிக்கும் போதோ உபயோக படுத்தபடுகின்றவைகள். இவற்றை ஒலியோடு சேர்த்து பின்வரும் பாடங்களில் கற்கலாம்.

2.5 Special Symbols

The following symbols are pronounced using nasal in conjunction with other consonants.

இந்த ஸ்பெஷல் குறியீடுகள் அவற்றின் பயன்பாடுகளை வார்த்தைகள் கற்கும் போது பின்பற்ற வேண்டி இப்போது கொடுத்து இருக்கின்றேன்.

இன்றைய பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

வீடியோக்கள் பதியும் திட்டம் உள்ளது. ஆனால், கிடைக்கும் நேரம் பொருத்து தாமதம் ஆகலாம்…பார்க்கலாம். 

இனி வரும் பாடங்களில் ஹிந்தி உயிர்மெய் எழுத்துக்களை நிறைவு செய்து விட்டு வார்த்தைகளை நோக்கி பயணிக்கலாம். இறையருள் புரியட்டும்.

நன்றி வணக்கம்.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here