3.ஹிந்தி= தமிழ் வார்த்தைகள்

0
638

வணக்கம் தோழமைகளே,

இன்று ஹிந்தி = தமிழ் பொது வார்த்தைகள் பாடம் 3.

வழக்கம் போல இன்றைய பாடத்திட்டம் 2 பகுதிகளைக் கொண்டது.

 1. இரெண்டாம் பாடத்திற்கான பதில்
 2. மேலும் சில புதிய வார்த்தைகள்.

இந்த பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? அல்லது குழப்பத்தை ஏற்படுத்துகின்றதா? என தெரிவித்தால் நலமாக இருக்கும்.

1.இரெண்டாம் பாடத்திற்கான பதில்கள்:

 1. अखिल

Akil (world)

அகில்- அகிலம்

தமிழ் வார்த்தை: உலகம்

வாக்கியம்: என் அகிலம் அவள் தானே 

 1. अंग

Angh(limb)

அங்க் – அங்கம்

தமிழ் வார்த்தை: உடல் உறுப்பு/உறுப்பு

வாக்கியம்: அங்க பிரதட்சணம் செய்தல்./ அங்கம் நடு நடுங்கிற்று.

 1. … ( அங்கி)

angi (cloak)

அங்கி

தமிழ் பொருள்: மேலாடை

வாக்கியம்: அந்த துறவி அங்கி அணிந்திருந்தார்.

 1. अंगीकार

Angikaar (Authentication)

அங்கிகார்- அங்கீகாரம்

தமிழ் வார்த்தை: சான்றளித்தல் /உறுதிப்பாடு/

வாக்கியம்: அவர் சிறந்த பேச்சாளர் என்று அவ்வமைப்பு சான்றளித்து பெருமைப் படுத்தியது.

 1. अंकुश

Ankush (Hook)

அங்குஷ் = அங்குசம்

தமிழ் வார்த்தை: இணையான தமிழ் வார்த்தை காணப்படவில்லை. யானையை அடக்க பாகன் உபயோகிக்கும் கருவி எனும் பொருளே காணப் படுகின்றது.

வாக்கியம்: யானையை பாகன் அங்குசம் கொண்டு அடக்கினான்.

2. புதிய ஹிந்தி= தமிழ் வார்த்தைகள்:

வழக்கம் போலவே நீங்கள் home work செய்யாவிட்டாலும் உங்களுக்கு Home work கொடுப்பதை நான் நிறுத்துவதாக இல்லை.

கீழ் வரும் வார்த்தைகளுக்கு ஈடான தமிழ் வார்த்தைகள் மற்றும் ஒரு வாக்கியம் அமையுங்கள்.

 1. असाध्य ( asaadhya)

Impossible

அசாத்ய = அசாத்திய

 1. असुर ( Asur)

Demon

அசுர் = அசுரர்

 1. अछूत (Achooth)

Dislike/Distaste/untouchability

அசூயை = அருவருப்பு/ தீண்டாமை

 1. श्रद्धांजलि ( Shradhanjali) / अंजली ( Anjali)

Tribute

ஷ்ரத்தாஞ்சலி/ அஞ்சலி

 1. अंजन ( Anjan)

Eye Liner

அஞ்சன் = அஞ்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here