Contest Entry 11

0
239

Aparna Sankar

அழகான வெண்புறாவே
உன் அழகுக்கு அழகூட்டுவது எதுவோ?
தகதகக்கும் நகைகளா?
திரும்பி பார்க்க வைக்கும் உடைகளா?
சொக்க வைக்கும் சௌந்தர்யமா?
அடி பெண்ணே நீ அழகு
நீ நீயாக இருக்கும் போது
நீ அழகு
உன் சுயத்தில் நீ உலகை காணும் போது
நீ அழகு
நிமிர்ந்து அனைவர் முன்னிலையிலும் நீ வெல்லும் போது…
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என் வாழ்த்தினை…
இடையோடு மனைதையும் சிறை செய்த என் ராணி
சூட்டுகிறேன் இதோ என் மணிமகுடம்…
உலகம் போற்றும் என்றும்
இந்த தாடியின் வெற்றிக்கு பின்னால் இந்த லேடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here