Contest Entry 14

0
281

Siva Ranjani

என் தொப்பி கேட்ட தோகையே !

உன் தோரணையில்,

தொய்கிறதடி எனது ராணுவ முறுக்கு!

உன் விழிச் சிரிப்பில் சரியுதடி என் சீருடைச் செருக்கு!

காதல் ராணுவம் ஏந்திய ஏந்திழையே!

காதலையும் பெருமிதத்தையும் கலந்து, நீ சிந்திய சிரிப்பு, ரசாயன ஆயுதமாய் என்னைச் சிதைக்குதடி!

இது நீடித்தால் நம் நாட்டிற்கு நல்லதல்ல!

சிறிது காலத்திற்கு சேமித்து வை நின் காதலையும் களிப்பையும்!

வென்று வரும் வேளைதனில், எனைக் கொன்று உன்னுள் புதைப்பாய் உன் சிரிப்பினில் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here