Bhuvi
அன்பு நிறைந்த
தடாகம் அவன்…
தன்னுள் ஆழியாய்
அகப்பட வைத்திட்ட
வசியகாரனவன்…
அவன் பெருங்காதலில்
எண்ணுவதெல்லாம்
நிகழ்த்திட்ட
திமிரானவளாய்…
அவன் மார் தழுவிட
விளைந்தேன்…
காதலியாய்,
தோழியாய்,
மனைவியாய்,
தாயாய்,
சேயாய், அனைத்து
பரிமாணங்களுமாய்…
அவனவள் என்ற
பெரும் கர்வமுடன்…
#Bhuvi