Contest Entry 21

0
258

Bala sundar

என் வானில் உன் மின்னல் சிரிப்பு…
என் வானில் உன் வானவில் கண்கள்…
என் வானில் உன் அர்ஜுனன் புருவங்கள்…
என் வானில் உன் பனிமேகக் கன்னங்கள்…
இவைகளிடம் இருந்து தப்பிக்கத்தான் என் வின்பறவைக்கு ரேடார்கள் இல்லை…

உன் விஷயத்தில் என் வின்பறவைபோல நானும் தோற்கிறேன் உன்னை வெல்லும் ஒவ்வொறு நிமிடமும்.

வானில் பறவைகளைக் கண்டு அஞ்சும் சக விமானியைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை…
பாவம் அவருக்கு காதலி இல்லை என்ற எண்ணம் தோன்றியபிறகும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது தோட்டாக்களை களவாடி விழிகளுக்குள் நிரப்பியவளே… என் யவன ராணி நீயடி!!
இதோ சூடிக்கொள் என் கிரீடத்தை…
கர்வமாய் சூடிக்கொள் என் கர்வத்தை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here