Contest Entry 26

0
260

எந்தன் தந்தையாகிய தமையனே
பட்டமாய் நான் பறக்க
நூலாய் தாங்கியவனே

பள்ளி பருவத்தில்
பாடம் பயிற்றுவித்த ஆசிரியனே

பதின்பருவத்தில் தடுமாறிய போது
பாதைகாட்டிய வழிகாட்டியே

காலங்கள் ஓடிவிட்டது
காட்சிகள் மாறிவிட்டது

உன்கைபிடித்து நடந்தவள்
விண்ணைத் தொட்டு பறக்கிறேன்.

நீ விதைத்த கனவை நினவாக்கி
வெற்றியை சமர்பித்தேன்
உன்னிடம்

நீயோ மீண்டும் எனக்கு அணிவித்து
அழகு பார்க்கிறாய்

சேயை அலங்கரித்து ரசிக்கும் தாயாக.

Kavi Rehabian

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here