Contest Entry 31

0
211

Mukil Nila

காத்திருக்கும் கணங்கள்
எல்லாம் காரிகையே நின்
முகமே என் மனதில்…

சில தினங்களாய்
நம் பிரிவை நினைத்து பார்க்கையில்
என் மனமும் கூட தான் கனக்க
செய்கிறதடி கண்ணம்மா நின்
நினைவினால்…

ஆனாலும்…

உனக்கான இலட்சியத்தில்
முதல் படியை எடுத்து வைக்கையில் இப்பிரிவு கூட எனக்கு மகிழ்ச்சியே …

அடுப்பு ஊத மட்டும் பெண்கள் அல்ல அகிலத்தை ஆளவும் பெண்ணால் இயலுமென இன்று உணர்த்திவிட்டாயடி கண்ணம்மா …

உன் தலைப்பாகையை
நான் கர்வத்துடன் உன் தலையில் அணிவிக்கையில்…

என்மீது உண்டான நாணத்தில்
நீ வெட்கம் கொண்டு அழகாய் சிரிக்கும் ஒரு நொடி போதுமடி கண்ணம்மா
நம் இத்தனை நாள் பிரிவின்
ஏக்கங்களை போக்கிட…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here