Contest Entry 42

0
231

Soundarya

பெண்ணவள் வெற்றியில்
கர்வமாய் நிமிர்ந்தது என்னிதழ்!
அதை கண்டு மலர்ந்தது
என் வெண்ணிலவின் மென்னிதழ்!

காரிகை உன் வெண்சிரிப்பு
சொக்க வைக்கிறது என்னை!
கண்களோ மயக்கத்தில்…
மறைத்தேன் கண்ணாடியணிந்து…
கள்ளமில்லா மழலைச் சிரிப்பில்
காதலோ நாணமோ கலந்துவிடாதிருக்க!

ஆயிரம் வெற்றி வாசலை
நீ கடந்தாலும்!
என் குருதியின் பிறப்பிடமே
உன் தலை வாசல்!

இப்படிக்கு
வெற்றி மங்கையின் வீர கவசமாய்!
அவளவன்:sparkling_heart:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here