Contest Entry 47

0
347

வதனி பிரபு

உன் அருகில் உயிர்ப்பாய்
நானிருக்க

கண்மூடி தியானமா என
கேட்டேன்

பூவாய்பூத்த புன்னகையூடே

கவிதை மனனம் என
நீயுரைத்தாய்

கவிதை மனனம் செய்யும்
நேரம் இதுவா என கேட்க

நீயுரைத்த பொய்யுணர்வை

வேண்டும் வேண்டும் என
மனம் கேட்க

என்னருகில் நீ இருந்தும்
கண்மூடி

உன் கவிதை மனனம்

என் கள்வனே எனவுரைத்தாய்…,

வாய்மூடி மௌனியானேன்
மனனம்

தடைபடக்கூடாதென்று…,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here