Contest Entry 49

0
227

Gayu RK

நாடுகள் பலசுற்றித்திரிந்தாலும்
உயிர் நாட்டம் கொண்டது உன்னில் மட்டுமே சகியே!
இன்று உன் அணைப்பின் மழைச்சாரல்
காணத்துடிக்கிறதடி சகியே!
என் மனம் லயித்த மங்கையடி நீ
மதுரமாய் என்னுள் துளிர்த்த காதல்
மதுவாய் உன் இதயமதை தந்தாயடி சகியே!
மணித்துளிகள் உனைப்பிரிந்து
கனப்பொழுதும் கடினமாய் கடக்கின்றேன் சகியே!
கானல் நீராய் நாம் காணும் கணங்கள் நீண்டாலும்…உன்னை கண்ட நிமிடப்பொழுதில் நெஞ்சம் நிறைந்திடும் சகியே!
கூடல்களும் ஊடல்களும் சங்கமிக்கும்
நேரத்திலே காதல் பெருக்கெடுத்திடும் சகியே!
விமானம் ஓட்டிடும் என் மனதின் ஓட்டங்களை என்றும் அறிந்தவள் நீயே என் சகியே! அன்புக்காதலியே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here