Contest Entry 9

0
254

ராஜலட்சுமி நாராயணசாமி

தலை நிமிர்ந்து நீ நடக்க…
என் தலைக்கணம் கூடுமடி…
வானுயர்ந்து நீ பறக்க
என் வாஞ்சை கூடுமடி…
முகில் துளைத்து முன்னேற
உன் சிறகுகள் போதுமடி
தடைகளை தகர்த்தெறிய
நின் தன்னம்பிக்கை உள்ளதடி…
முட்களை விலக்கிவிட
உன் முதுகெழும்பு உள்ளதடி…
களைத்து போய் வீடு வந்தால்…
கண்மூடி துயில் கொள்ள
என் மார்பு உள்ளதடி…
உலமெல்லாம் சுற்றிவரும்
வானாளும் பறவைக்கும்
இளைப்பார இடமுண்டு…
உலகையே அளந்து வரும்
உன்னத பெண்ணிற்கும்
காதலெனும் கூடு உண்டு
உன் உயரம் கண்டு
பெருமைகொள்ளும்
கணவனின் அன்புண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here