Jsl புகைப்படப் போட்டி எண் 1 நடுவர்கள்

0
409

நட்புக்களே,

வெகு நாள் தாமதமாக இதைப் பதிவதற்கு மன்னிக்கவும்.

JSL புகைப்படப் போட்டிக் கவிதை 1
ன் நடுவர்களைத் தெரியப்படுத்துவதும், அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்குமான பகுதி இது.

இந்தப் போட்டிக்கு நான் தெரிவு செய்திருந்த மூவர் ஒரு எழுத்தாளர், ஒரு கவிஞர், ஒரு வாசகர்.

முதலாவதாக எழுத்தாளர் யார் என்று பார்ப்போம்.

நம் அனைவருக்கும் மிக நன்றாக அறிமுகமான சகோதரி ரேவதி அசோக் அவர்கள் தான் கவிதைப் போட்டியின் முதல் நடுவர்.

பல்வேறு நாவல்கள் எழுதி பிரபலமான இவரோடு ரிலே நாவல் எழுதுகையில் நட்பு கொள்ள வாய்ப்புக் கிட்டியது. எளிமை மற்றும் தலைமைக் குணமும், திருத்தமாக எதையும் வரையறுக்கும் perfectionism தனிப்பட்ட விதத்தில் இவரில் எனக்கு மிகவும் கவர்ந்தவை.

புகைப்படக் கவிதைப் போட்டியின் நடுவராக இருக்க இவரை நான் அணுகிய போது மிக மகிழ்ச்சியோடு பொறுப்பை ஏற்றுக் கொண்டு உரிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பெண்கள் பகிர்ந்தமைக்கு எனது அன்பையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

அடுத்து நான் தெரிவு செய்திருந்த கவிஞர் போட்டி ஆரம்பித்த பின்னர்ப் பங்கேற்க முடியாத நிலை. எனவே நான் ( ஜான்சி) இரெண்டாவது நடுவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

மூன்றாவது நடுவர் ஒரு வாசகர் முதலில் தெரிந்து கொள்ளப்பட்ட வாசகர் போட்டி முடிவுகள் அறிவிக்கும் நாள் நெருங்கி வருகையில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாத நிலை.

அறிவித்த வண்ணம் அதே தேதியில் போட்டி முடிவுகளைப் பகிர உறுதுணையாக இருந்தவர் அவருக்குப் பதிலாக நான் அனுகிய சகோதரி சைந்தவி.

எனக்குத் தெரிந்த நல்லதொரு வாசகி இவர் நான் அணுகவும் தயக்கமின்றிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

:bouquet:

உரிய நேரத்தில் போட்டியின் முடிவுகள் வெளி வர உதவிய சகோதரி சைந்தவிக்கு அன்பும் நன்றிகளும் 

இவர் முக நூலில் இல்லாத காரணத்தால் உங்களுக்கு இவரைத் தெரிய வாய்ப்பில்லை. குடும்பத் தலைவியான இவர் ஒரு அருமையான வாசிப்பாளர்.மற்றொரு முறை மிக்க நன்றிகள் சைந்தவி சிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here