பிரபஞ்சத் துகள்_7_ஜான்சி

0
291

அத்தியாயம் 7

காடும் கடலும் சேர்ந்தாற் போல அந்த இடம் இருளில் மருட்டியது. தனது ஆக்சஸ் கொண்டு அந்த பெரிய பங்களாவின் கேட்டை காரில் இருந்தே திறந்தவன். போர்டிகோவில் காரை நிறுத்தினான்.

அருகில் ஜங்க் ஜங்கென நடந்து வரும் பூமாவை அவள் அங்கங்களை வெறித்தவாறே கதவிற்கு ஆக்சஸ் கொடுத்து திறந்தான். இவன் முகத்தை காட்டியதும் அது திறந்தது. உள்ளே பெரியதொரு இராஜாங்கமே இருந்தது.

ஷாண்ட்லியர் விளக்கும், அத்தனை அழகாக இண்டீரியர் செய்யப்பட்ட பெரிய ஹாலும் பூமாவை மருட்டியது. விபாகரன் அவளை அணைத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.

இருவரும் குளித்து வெளியே வர, அவர்கல் உடலில் குறைவான உடைகள் மட்டுமே மீதமிருந்தன. உணவு டேபிளில் விதவிதமான மாமிச உணவு வகைகள் வீற்றிருந்தன கூடவே அத்தனை மது வகைகளும்.

உணவின் வாசனைகள் இழுக்க இருவரும் உண்ண அமர்ந்தனர். காட்டுவாசியாய் கைகளில் வழிய வழிய அவள் உண்டதை பார்த்த போது இவனது காம உணர்வுகள் பேயாட்டம் போட்டன. அவனது வித்தியாசமான தேடல்களின் முடிவுகள் அவனை ஒருபோதும் ஏமாற்றாதவைகளே.

பள்ளிப்படிப்பு ஆரம்பித்த போதில் இருந்த அவனது இளமைத் தேடல்கள் ஆரம்பித்து இருக்க, தற்போது மத்திய இருபதுகளில் இருந்தவனுக்கு எல்லாம் சலித்துப் போன நிலைதான். இப்போது அவனது தேடல்கள் விதவிதமாய், இரகம் இரகமாய்… பிஞ்சுகளினின்று எல்லா பருவமும் துய்த்துப் பார்த்தாயிற்று. ஆம், அவனைப் பொறுத்தவரை பெண் என்றால் அவ்வளவுதான்.

இருவரும் உண்டுக் குடித்தப் பின்னர் பெரிய திரைக் கொண்ட பிரம்மாண்டமான அந்த பொழுது போக்கு வந்தனர். உணவும் போதையும் இருவரையும் உன்மத்தமான நிலைக்கு கொண்டுச் சென்றிருந்தது. அந்த அறையை எதற்காக யார் அழகழகாய் வடிவமைத்துக் கட்டினார்களோ? ஆனால், இப்போதோ அதஒ அனுபவிப்பவர்கள் நிலையும், அனுபவிக்கப் படும் விதமும்…

அந்த வெட்கமற்ற, உடைகளற்ற, பேச்சுக்களற்ற செயல்கள் மட்டும் மிகுந்த காமச் செயல்முறை காணொளியை பிரம்மாண்டமான திரை காண்பிக்க… போதையின் பிடியில் இருந்த இவர்கள் இருவர்களின் ஆக்ரோஷமான தேடல்கள் ஆரம்பித்தன.

அப்பப்பா அந்த அனுபவத்தின் மகிழ்வில் அயர்ந்துப் போனான் அவன்… தனது திட்டங்கள் ஒருபோதும் தோல்வியுற்றதில்லை எனத் தெரியும். ஆனால், இம்முறை அவனுக்கு அடித்திருப்பது ஜாக்பாட்டே தான்.

உண்டார்கள், குடித்தார்கள் களித்தார்கள் அதுவும் காணொளி தோற்று விடும் அளவிற்கு களித்தார்கள். வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்தது சனிக்கிழமை முன்பகலில் களைத்துச் சரிந்து அவர்கள் உறங்கி எழுந்த போது மதிய நேரம் கடந்திருந்தது. இரவு வீடு திரும்பியாக வேண்டும் எனும் முனைப்பில் கிடைக்கும் நேரத்தை விபாகரன் மறுபடி உபயோகப்படுத்த எண்ணினான். தன் அருகில் உறக்கத்தில் இருந்தவளை எழுப்பினான்.

மறுபடி செழிக்க உண்டு, குடித்து அவர்கள் களிக்க ஆரம்பித்த போது எல்லாம் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. தங்களருகே சப்னா வந்து நின்றதை அவன் கவனிக்கும் வரையிலும் கூட எல்லாமும் சொர்க்கமாகத்தான் இருந்தது.

சட்டென்று சொர்க்கம் எப்போது நரகமானது?

‘தன்னை இப்படி பார்த்த பின்னர் சப்னா என்ன வேண்டுமென்றாலும் செய்வாளே?’ சப்னாவின் பார்வையில் போதை சட்டென்று இறங்க, உள்ளூர பயத்தில் வெடுவெடுத்தான் விபாகரன். அவனுக்காவது கொஞ்சம் தெளிந்திருந்தது. ஆனால், அதுவரையில் அவனுடன் சரசத்தில் இருந்தவளோ  போதையில் சுரணையற்றுக் கிடந்தாள்.

கிடைத்த துணியை எடுத்து பூமா மேல் வெடுக்கென போர்த்தினாள் சப்னா. அழைப்பு பறக்கவும் சில மணித்துளிகளில் பூமா அங்கிருந்து ஒரு குப்பையென அகற்றப்பட்டாள்.

அலைபேசியில் அன்னம்மாளுக்கு அழைக்க, தங்களுக்கு தேர்தலுக்கு டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தவரை சப்னாவின் அழைப்பு கலவரப்படுத்தியது. “ஐயோ… என்ன செஞ்சு வச்சிருக்கிறான் இவன்?” அயர்ந்தார்.

போட்டது போட்ட படி தங்களது பல சந்திப்புக்களை தாமதிக்கச் சொன்னவர் உடனடியாக ஃப்ளைட் டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்து கணவருடன் விரைந்தார். கணவனும் மனைவியுமாக அந்த பிசினஸ் க்ளாஸ் இருக்கையில் அமர்ந்து தீவிரமாக சிந்தித்து சில முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது.

தங்களது தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கப் போகும் பூமா பிரதீபன் திருமணத்தை பூமா இல்லாமல் எப்படி நடத்துவது. ஒரு பக்கம் பூமா என்னும் துருப்புச் சீட்டு என்றால் மற்றொரு பக்கம் சப்னா எனும் மிகப்பெரிய செல்வ சுரங்கம்.

சப்னாவின் தற்போதைய ஏமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் அவளும் அவளது கோடிக்கணக்கான சொத்து மட்டும் பறிபோகாது. கூடவே இவர்கள் இதுநாள் வரையிலும் கட்டிக்காத்த பல இரகசியங்களும் வெளிப் போகும். இப்போது சப்னாதான் சப்னா மட்டும் தான் முக்கியம் மற்றவைகளைப் பார்த்துக் கொள்ளலாம் எனும் முடிவிற்கு வந்து விட்டனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here