1.நீ இருந்தால் – கவிதை – சரத் சரவணா

0
380

நீ இருந்தால்

உன் அன்பென்ற அடை மழை கூட
வேண்டாம் பெண்ணே…

கானல் நீர் போல் நீ ஒரு பார்வை பார்த்தாலும்
போதுமடி கண்ணே…

கானல் நீரை கட்டுக்கடங்கா காட்டு வெள்ளமாய்
மாற்ற என்னால் முடியும்…

எனக்காக ,எனக்கு மட்டுமாய்
என்னுடன் நீ இருந்தால்…

காத்திருக்கிறேன் என் கண்மணியே
என்னுடன் நீ சேரும் அந்த மணித்துளிக்காக…

நூறு ஜென்மத்து வாழ்க்கையை
வாழ்ந்திருப்பேன்…

ஒரு சில மணித்துளி என்னருகே
நீ இருந்தால்…

அன்புடன்-சரத் சரவணா …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here