2. தங்கைக்கு ஓர் கடிதம்

0
565

தங்கைக்கு ஓர் கடிதம்

… துளித் துளியாய் விழும் வானத்து கண்ணீரால்
இந்த பூமி செழிக்கும்…


பெண்ணே உன் நேசப் பார்வையில்
ஒரு துளியாவது கொடு…
மரித்த எந்தன் உள்ளம் துளிர்க்கும்…


உன் சுயத்தையா நான்
அழிக்க சொன்னேன்?


என் சுயத்துடன் மட்டுமே
நான் இருந்தேன் இது தவறா? -இல்லை


உன்மேல் நான் வைத்த
அளவு கடந்த பாசம் தான் தவறா?


பார்க்கும் பெண்களையெல்லாம்
வயது வித்தியாசமின்றி…


தவறான பார்வை பார்க்கும்
ஆண்கள் இருக்கும் இந்த உலகில்…


உன்னை என் உடன்பிறவா தங்கையாக
மட்டுமே நேசித்ததுதான் என் தவறா?


ஓ உன்னுடன் பிறக்காமல்
உன்னை நேசித்ததுதான் என் தவறா?


அப்படியானால் காத்திருக்கிறேன்
மீன்டும் ஒரு ஜென்மத்திற்க்காக…


அந்த ஜென்மத்திலாவது என்
உடன் பிறந்த தங்கையாக வருவாயா?


உன் திரு வாய் மலர்ந்து என்னை
அண்ணம்மா என ஒரே ஒரு முறை அழைப்பாயா?

அன்புடன்-சரத் சரவணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here