3. ஏக்கப் பார்வை _ கவிதை _ சரத் சரவணா

0
420

ஏக்கப் பார்வை

உன் நினைவு எனக்கு இல்லையென
சொன்னது யாரடி பெண்ணே?..


என் அன்றாட பணி முடியும் வரை
எனக்காக காத்திருந்தவளே…


உனக்கு ஏன் புரியவில்லை
உன்னை கவனிப்பதும்
என் அன்றாட பணி தான் என்பது…


எனக்காக நீ பார்த்து பார்த்து செய்யும்
ஒவ்வொரு செயலுக்கும்…
என் நேசப் பார்வை ஒன்றை மட்டுமே
நீ எதிர்பார்ப்பது புரிகிறது…


எனக்காக நீ செய்யும் ஏதேனும்
ஒரு செயலை நிறுத்திவிட்டு…


என் கண்களில் தெரியும்
ஏக்கப் பார்வை யை மட்டும் பார்…


அந்த பார்வை சொல்லும்
எனக்கு நீ எவளவு முக்கியம் என்று…


ஆனால் ஒரு போதும்
என் ஏக்கப் பார்வைய நீ காணப்போவதில்லை…


நீ என்னை ஏமாற்றினால் தானே
காண்பதற்க்கு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here