1. படைப்பு Vs படைப்பாளி

0
543

எந்த துறையாக இருக்கட்டும் பிரபலமானவர்களைக் குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுகின்றன. அதன் காரணமாக நான் எண்ணுவது ஒன்றே.

  1. முதலில் அவர்கள் படைப்பு சிறப்பாக இருப்பதைக் கண்டு பாராட்டுகிறார்கள். 
  2. பின்னர் படைப்பாளியை சிலாகிக்க தொடங்குகிறார்கள். 
  3. படைப்பாளி நல்லவராக இருக்க வேண்டுமெனெ விரும்புகிறார்கள். 
  4. படைப்பாளிக்கு ஜிங்சா அடிக்க துவங்குகிறார்கள். 
  5. படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு உதாரண புருஷர் அல்லது உதாரணப் பெண்மணியாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். 
  6. தங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக படைப்பாளி நடந்துக் கொண்டால் ஏமாற்றம் அடைகிறார்கள். 
  7. படைப்பாளி தன் படைப்புகளை உலகம் உய்வதற்காக மட்டும் படைத்தான் என்றும், அவனுக்கு பசிக்காதென்றும், அவன் பணத்திற்கு ஆசைப்படக் கூடாதென்று எதிர்பார்ப்பார்கள். 
  8. முதலில் தலையில் ஏற்றி வைத்து விட்டு, படைப்பாளி தலையில் அசிங்கம் செய்கையில் தலையில் ஏற்றி வைத்தது தான் தான் என்று மறந்து குமுறுவார்கள்.

ஆக…   முதல் வேலை அதான் இரசிக்கிரதோட நிறுத்திக்கணும். மத்தது 2-8 எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.

நீயே உயர்த்தி வைப்ப
நீயே தாழ்த்திப் போடுவ

எதுக்கு?

படைப்பை இரசி…

படைப்பாளியை காலை தொட்டு கும்பிடாதே…

ஏன்னா அவனவனுக்கு அவனவன் சுயமரியாதை மிகவும் முக்கியம்.

உனக்கு சுயமரியாதை வேணுமா வேணாமாங்கிறதை நீதான் முடிவு பண்ணிக்கணும். 

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here