உள்ளம் உந்தன் வசம்_17_ஜான்சி

0
239

அத்தியாயம் 17

அகிலா ஆதவன் முன் வந்து நின்று, அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். அதுவரை அவள் இருந்த இறுக்கமான மன நிலை மாறி அவனைக் கண்ட குதூகலத்தில் தன்னுடைய முன்போன்ற கலகலப்பிற்குத் திரும்பி விட்டிருந்தாள்.

அவனது வலக்கரத்துக்குள் தன் கரத்தை கோர்த்துக் கொண்டு, தலையை அவன் தோளில் சாய்த்தவாறு அவனோடு தங்கள் அறைக்குள் நடக்கத் தொடங்கினாள்.

‘நான் உங்களை எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா?’ அவளது பேச்சைக் கேட்டு இவன் மனம் துள்ளியது.

அறைக்குள் நுழைந்து தாளிட்டவன் திரும்பி பார்க்க அவனுக்கு அவனுடைய அறையே வித்தியாசமாகத் தெரிந்தது.

அறையை அவள் விருப்பத்திற்கேற்ப அழகு படுத்தி இருந்தாள். பார்வை சுழன்று கொண்டே வர ஓரத்தில் இருந்த ஒரு அடி ஸ்டூலில் ஒரு நொடி தேங்கி நின்றது. அதைக் கண்டதும் அவன் முகத்தில் தானாகவே முறுவல் வந்து சேர்ந்தது

அவனது அறையில் எல்லாமே அவனது உயரத்திற்கே இருக்கும். இந்த ஸ்டூல் அவன் மனைவிக்குத் தேவையான ஒன்றுதான் என்றெண்ணியவனாக அதன் அருகே சென்று நின்றான்.

சட்டென்று அதன் மேல் ஏறி நின்ற அகிலா இப்போது ஆதவனின் உயரத்திற்கு வந்திருந்தாள். அவள் செய்கையில் அவன் சிரிக்கும் முன்பாக,

‘நீங்க ஏன் இவ்வளவு உயரமா இருக்கீங்க ஆதவ்?’ என்றவளாய் தன் முதல் முத்தத்தை அவன் கன்னத்தில் பதித்தாள்.

மனம் நிறைய ஆசைகள் இருந்தும் எப்படித் தன்னை வெளிப்படுத்துவது எனத் திணறிக் கொண்டிருந்த ஆதவன் மனைவியின் அதிரடியில் திகைத்து விழித்தான்.

‘என்ன?’ என்றான்.

‘என்ன? என்ன? என் ஹஸ்பெண்ட், நான் கிஸ் பண்ணினேன். உங்களுக்கு என்ன?’

அவள் கேட்ட விதத்தில் அவன் கண்கள் தயக்கத்தின் திரை விலக்கி காதலை வெளிப்படையாய் காட்டின.

‘ஏன் அகிலா, இதுக்காகத்தான் முதல் முறை பார்க்கிறப்பவே அப்படிக் கேட்டியா?’

‘பின்னே?’

எனச் சிரித்தவள் பதில் சொல்லச் சொல்ல அவனுடைய கைகள் அகிலாவின் இடுப்பில் பதிந்து, அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டு இருந்தன. அவளைச் சட்டென மலைப் பாம்பென ஆதவன் தனக்குள் சுருட்டிக் கொண்டான்.

அவன் அணைப்பில் அகிலா தன் எலும்புகள் தெறித்து விடுமோ? எனும் அச்ச உணர்வை உணர்ந்தாள். அத்தனையாய் அவன் அவளை இறுக்கி அணைத்து பிடித்து இருந்தான். இடது கை அவளது இடுப்பை முற்றுகையிட்டு இருக்க, தன் வலது கையால் அவளின் முதுகைச் சுற்றி பற்றியவன் அவள் பின் தலையில் கை கொடுத்து, தன் நீண்ட உள்ளங்கையின் பெருவிரலால் அவளது நாடியை உயர்த்தியவன் அவள் உதட்டை தன் உதட்டால் கவ்வி கொண்டான். இத்தனை நாளாய் அவளால் அவன் அடைந்த மனக் கலக்கத்தை ஆற்றும் வழி அறியாது அவளிடமே தஞ்சமடைந்தான்.

அகிலா விளையாட்டாக ஆரம்பிக்கப் போக, ஆதவனோ மனைவியிடம் தீவிரமாய்த் தன் காதலை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருந்தான். அங்கே விடாத காதல் பெருமழை பொழிந்து கொண்டிருந்தது. கணவனின் அதிரடி அணைப்பு, முத்தம் எதையும் எதிர்பாராமல் இருந்தவள் அவன் அவளது உதடுகளுக்கு விடுதலை கொடுத்ததும் அவன் தோளிலேயே பிடிமானம் இன்றித் துவண்டாள். தன் தோள் சாய்ந்திருந்தவளின் தலையை வருடியவன் சட்டென்று குனிந்து தன் கையில் அவளை ஏந்திக் கொண்டவாறே கட்டிலில் சென்று அமர்ந்தான்.

அவளைத் தன் கைகளில் இருந்து விடுவிக்கும் உத்தேசம் இல்லாதவன் போல மறுபடியும் தன்னோடு சேர்த்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். இப்போது அவளது முகம், கண்கள், காதுகள், கழுத்துத் தோள்பட்டை என்று ஒரு இடம் இல்லாமல் கண்ணிற்கு அகப்பட்ட இடமெல்லாம் அழுத்தமாய் முத்தமிட்டுக் கொண்டே ‘குட்டிமா ஐ லவ் யூ’ என்றவனாய் பிதற்றிக் கொண்டிருந்தான். அவனது கடந்த நாட்களின் தவிப்புகள் அவ்வாறாக வெளிப்பட்டுக் கொண்டு இருந்தன.

அகிலாவிற்குக் கணவன் அதிரடியில் முதலில் ஒன்றுமே புரியவில்லை, அதனை அவள் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. அவன் அமைதியானவன் என்பது அவளுக்குத் தெரியும், இத்தனை ஆர்ப்பாட்டமாய்த் தன் காதலை சொல்வானெனத் தெரியாதே?

அவனது முத்தங்களை ரசித்து, அதில் பொழியும் அவன் காதலில் திணறிப் போய் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனது காதலுக்குப் பதிலாக அவளது அதரங்கள் ‘லவ் யூ டூ ஆதவ்’ எனச் சொல்லவும் மறக்கவில்லை.

அவனோ கிடைத்தறியாத ஏதோ ஒன்றை கண்டு கொண்டதை போல அவளை ஆக்கிரமித்து இருந்தான்.

முதல் நாளன்றே தன்னைக் கவர்ந்த அந்தப் பூ முகத்தை வருடினான். ‘அன்னிக்கே மயங்கிட்டேன் போலிருக்கு, புரிய நாளாயிடுச்சு’ என்னிக்கே என அவள் கேட்கவில்லை, கேட்கும் நிலையிலும் இல்லை. தாபத்தில் துடிக்கும் அவள் உதடுகளை வருடினான். அவளது கன்னத்தோடு தன் கன்னத்தை உரசினான் அதன் மென்மையை இரசித்தான். ‘அங்கே போய் உன் கன்னங்களோட சாஃப்ட்னெஸ் எப்படியிருந்ததுன்னு யோசிச்சுட்டு இருந்தேன் ஞாபகமே வரலை’ பிதற்றினான். கேட்டுக் கொண்டிருந்தவள் வெட்கத்தில் சிவந்தாள்.

‘இனி எங்கே போனாலும் உன்னைக் கடத்திட்டுப் போகப் போறேண்டி, தூக்கமே வரலை என்னை நீ ரொம்பப் படுத்திட்ட…’ இன்னும் என்னென்னவோ பிதற்றியவன் காதலில் முற்றும் கட்டுண்டு போய்ப் புலன்களின் மயக்கத்தில், அவனது இறுகிய அணைப்பில் கிடந்தாள்.

சட்டென்று அவளது கால்பக்கம் உடை உயர்த்தப் படத் திடுக்கிட்டு எழுந்தவளை மறுபடி அமர்ந்து மடியில் ஏந்திக் கொண்டான். கண்களில் அப்பட்டமாய்க் காமன் கணைகள் வீற்றிருக்க அவற்றால் அவளைத் தாக்கி வீழ்த்தி கரைத்துவிடும் எண்ணத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பதறியதை கண்டு,

‘இல்லமா கால் புண் ஆறிடுச்சான்னு பார்க்க மறந்திட்டேன்ல?’

முட்டியை வருடிக் கொடுத்தான்.அவனென்னவோ சாதாரணமாகத்தான் வருடினான். இவளுக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளாய் உள்ளூர கூசியது.

‘அதெல்லாம் நல்லாயிடுச்சு’ வாயாலேயே டைப்படித்தவளாகக் கூற

‘அப்படின்னா உனக்கு எதுவும் பிரச்சனையில்லில்ல?’ எதற்காகக் கேட்கிறான் என அவள் உணரும் முன் அவளைக் கொள்ளையடிக்கத் துவங்கி இருந்தான்.

காலை மணி பதினொன்று

கணவனை எதிர்பார்த்து இரவு முழுக்க விழித்திருந்தது, வந்ததும் வராததுமாக கணவன் செய்த காதல் லீலைகள் என அகிலாவின் கண்கள் விழிக்கவும் இயலாமல் கபகபவென எரிந்தன, எழ முயற்சித்தவளை தனக்குள் இழுத்து சுருட்டிக் கொண்டான்.

‘கம்பேக்டா குட்டியா பொம்மை மாதிரி இருக்கேடி, ரொம்ப வசதியா இருக்கு’ கன்னத்தில் முத்தமிட்டான், எத்தனையோ முறை போல மறுபடியும் அவள் கன்னத்தோடு தன் கன்னம் உரசினான்.
‘தாடி முள்ளா குத்துது’ முனகியவளை அவன் சற்றும் கண்டுக் கொள்ளவில்லை.

‘நேரமாச்சு ஆஃபீஸ்க்கு லீவு சொல்லவாவது செய்யணும் விடுங்க…’ மொபைலை அவளிடம் நீட்டியவன்

‘அதெல்லாம் உன் பாஸீக்கு லீவ் சொல்லிட்டேன்…ச்சு, சும்மா தூங்கு கேடி’

முதலில் அவன் லீவ் சொன்னதாக சொன்னதும் மெசேஜ் சரிபார்த்து மொபைலை வைத்தவள் அவன் சொன்ன கேடியில் சிலிர்த்தெழுந்தாள்.

‘என்னது கேடியா? இதுதான் நீங்க செல்லப் பெயர் வச்ச இலட்சணமா?’

‘காரணப் பெயர்டி’

சிலிர்த்த மனைவியிடம் இரண்டு மொத்துகள் வாங்கிக் கொண்டவன் அவளை அவள் குறும்பை தான் கண்டுக் கொண்ட தருணங்களைச் சொல்லி அவளைச் சீண்டி சீண்டி விளையாட்டுப் பேச கோபங்களை முத்தங்களால் தணிக்க காதல் மன்னன் ஆகிப் போனான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here