நீயே என் இதய தேவதை_பாரதி_ 23

0
808
Neeye En Idhaya Devathai

” அவளை பத்திப் பேச உனக்கு என்ன தகுதி இருக்குது ?. அண்ணன் சொல்லிட்டு காதலிக்கிறேன் வந்து நின்னவ தான நீ?அடுத்த வீட்ட பொண்ண இப்படி அசிங்கப்படுத்துற நினைக்குற? வெக்கமா இல்லை.பொண்ணா நீயெல்லாம்? கட்டுகடங்காத கோபத்தினை வெற்று வாரத்தைகளால் மற்றும் தணித்து விட முடிவதில்லை.இன்னும் அடங்கவில்லை அவனது கோபம்.இனி இது மாதிரி எதாச்சும் பேசுன….என்று விரல் நீட்டி எச்சரித்தவனை பார்த்து மிரண்டு நின்றாள் சந்தியா.விறுவிறு மாடியேறி தனது இடத்தினை அடைந்தவன் அடுத்த சில நிமிடங்கள் தனது மேலாளருடனும் வினோத்துடனும் உரையாடினான். அன்றிலிருந்து சந்தியாவிற்கு வேறு துறை, வேறு ஷிபட் என மாறியது.

அப்படியொரு கோபம் இருந்ததின் அடையாளமே தெரியாமல் மாலை வீட்டிற்கு திரும்பினான்.”விட்டுச்சு ஏழரை” எனும்படி இருந்தது அவனுக்கு.ஆம் சந்தியாவிற்கும் தனக்குமான எந்த பிரச்சனையும் அவன் மேனேஜரிடம் கூறவில்லை.மாறாக அவளைப் பற்றி பொய் சொல்ல தேவையில்லாமல் அவளது வேலை ரீதியாகவே அத்தனை குறைகள் இருந்தது நிம்மதியாக இருந்தது.வீட்டிற்கு சென்றவுடன் தான் மனம் இன்றைக்கான நிகழ்வுகளை அசை போட திரும்பவும் சந்தியா சொன்னது நினைவுக்கு வந்தது.

“அன்பு”என்ற  குரல் தொலைவில் ஏங்கோ ஒலிப்பது போலிருந்தது சிந்தை கலைந்து எழுந்தவன் முன் காபி டம்ளருடன் நின்றிருந்தாள் சங்கீதா. ஓ….. சாரி டா…. நான் கவனிக்கல என்றபடி  வாங்கிகொண்டவன் எதிரிலிருப்பவளை நோக்கினான்.அகத்திலிருப்பது முகத்தில் தெரியும் என்பார்களோ.? ஆனால் அவளது மதி முகத்தில் எந்த கயமைத் தன்மையும்  இருப்பதாக தோன்றவில்லை.  மாறாக லேசான குழப்பம், தயக்கம், தேங்கி நின்றது.

ஒருவேளை சந்தியா சொன்னது உண்மையாக இருக்கலாம்.ஆனால் அதில் என்ன தவறு இருக்கிறது?  காதல் தோல்வியடைந்த  ஒரு பெண் மண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவள்  போல அவளது  பேசுவது எத்தனை பெரிய பாவம்?

என்ன…?

ம்ம்ம் …என்னம்மா?

இல்லை வந்ததிலேர்ந்து  எதோ யோசனையாவே இருக்கிங்க…?  என்ன  அப்படி யோசிக்கறீங்க?என பட்டென்று கேட்டுவிட

அது அதுவந்து என திணறியவன் ஆபிஸ் விஷயம் டா…? என எதையோ சமாளித்து அவளை அனுப்பிவைத்தான்.

அவனுக்கு தான் கேட்ட விஷயத்தை சங்கீதாவிடம் பகிரந்து கொள்ளவோ அதனை தெளிவுபடுத்திக் கொள்ளவோ விருப்பமில்லை. இப்போதுதான் சகஜமாக தன்னிடம் உரையாட ஆரம்பித்திருக்கிறாள்.முடிந்து போன ஒன்றை கிளறி அவளை காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தான்.

ஆம் முடிந்து போன ஒன்று என்றுதான் நினைத்திருந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here