நீயே என் இதய தேவதை_பாரதி_25

0
753
Neeye En Idhaya Devathai

அந்த கடிதத்தில்

மன்னிக்கவும் அன்பு . நமது  திருமணத்திற்கு முன்பு எனக்கென்று ஒரு காதல் இருந்தது. எனது பெற்றோரின் கட்டாயத்தினாலே நான் உங்களைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டேன்.திருமணத்திற்குப் பின்பு எல்லா பெண்களையும் போலவே கிடைத்த வாழ்வை முழுமனதோடு  ஏற்றுக்கொள்ளதான் முயற்சித்தேன். ஆனால் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. எனது மனதிற்கு பிடித்த வாழ்வை தேடிப் போகிறேன். யாரும் என்னைத் தேட வேண்டாம்.

இப்படிக்கு
சங்கீதா

சில சம்பவங்களை நம்புவுதற்கே அத்தனை கடினமானதாய் இருக்கும். இது கனவாய் இருந்து விழித்துக் கொள்ள மாட்டோமா எனத் தோன்றும்.அப்படி ஒன்றாக அமைந்தது அன்புவுக்கு அந்த நாள்.அந்த கடிதத்தை படித்து முடித்தவன் சக்தி மொத்தமாய் வடிந்தாற்போல அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க கூட இயலாதவனாக சிலையாய் நின்றிருந்தான்.இயலாமையின் குரூரங்கள் பொதிந்த பொழுதுகள் அவை. நம்பிக்கைகள் அத்தனையும் உடைந்த கணமதின் வலியை சொல்லி மாளாது.

வெறும் கடிதம் மட்டும் என்றால் என்  சங்கீதா இப்படி எல்லாம்  செய்வாளா ? என்று சந்தேகித்திருப்பான்.ஆனால் அவளது பெற்றோரின் மெளனம் இது உண்மையென்று சொல்லாமல் சொல்லியது.மேலும் அலுவலகத்தில் சந்தியா சொல்லிய சொற்கள் அத்தனையும் சாட்சிக்காக வந்து நின்றது.மகனது இந்த நிலைக் கண்டு
நெஞ்சே வெடித்துவிடும் போலானது சிவகாமிக்கு.

அலுவலகத்தில் பணிபுரியும் சிறு பையன்கள் என்ன சொல்லி யாரைத் தேற்ற என புரியாது  கலங்கி நின்றிருக்கு ஆனந்த் மட்டும் அன்புவின் அருகில் வந்தவன் அவனது தோளை அணைத்துக் கொண்டான்.இப்போதைக்கு என்னால் இதைத்தான் செய்ய முடியும் என்பது போலிருந்ததுஅவன் செயல். 

தாயும் தமயனும் அதிர்ச்சியில் மீளாதிருக்க சந்தியா மட்டும் அழுதபடியே   கீதாவின் பெற்றோர்களை அதட்டியபடி இருந்தாள்.சொந்த பந்தங்கள் சில அவளோடு சேர்ந்து பொண்ணு வளர்த்த லட்சமென்று அவர்களை பழிக்க
சிலர்  தங்களுக்குள்ளாகவே என்னவோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

பேசி பேசி ஓய்ந்த சந்தியா இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்ச எங்கள அசிங்கப்படுத்துனதுக்காகவும் எங்கண்ணன் வாழ்க்கையை சீரழிச்சதுக்காவும்  உங்கள சும்மா விட மாட்டேன்.உங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்றேனா இல்லையானு பாருங்க  என ஆவேசமாக கத்த

ஏஏஏஏய் நிறுத்துடி. நானும் பாத்துட்டே இருக்கன்.என்ன நீ பாட்டுக்கு பேசிட்டே போற……?  பெரியவங்கனு கொஞ்சம் கூட  மரியாத இல்லாம. என்று சந்தியாவின் மாமியார் தனது சொந்தமான சங்கீதாவின் பெற்றோர்காக பரிந்து பேச வர

நீங்க சும்மா இருங்க அத்த.இது எங்கண்ணன் வாழ்க்கைப் போச்சே ன்ற ஆதங்கத்துல  நான் பேசிட்டிருக்கேன்.இப்போ நான் இவங்களுக்கு மரியாதை கொடுக்காத்து தான் உங்களுக்கு பெருசா தெரியுதா ? மொத்த குடும்பமே சேர்ந்து எங்கள ஏமாத்திட்டாங்க.இவங்களுக்கு மரியாதை ஒன்னுதான் குறைச்சல் என்று சந்தியா எதிர்த்து பேச

வாய மூடு சந்தியா.இப்போது எதிர்ப்பு குரல்  வந்தது சிவகாமியிடம்.இப்படியெல்லாம் பேச சொல்லிக் கொடுத்தா நான் உன்ன வளர்த்தேன். அவர்கிட்ட மன்னிப்பு கேளு என

சந்தியாவோ முடியாது என்று பிடிவாதமாக நின்றாள்.

நேரே கீதாவின் அப்பாவிடம் சென்றவர் அவ பேசுன பேச்சுக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறன்.எந்த தகப்பனும் தான பெத்த மக ஓடிப்…..  இப்படி செய்யனும் நினைக்கிறதில்லை.ஆனா கீதாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைனு ஒரு வாரத்தை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்காதே…என்று அழ

ஏதோ தான் தவறு செய்துவிட்டதை போல குன்றிப் போயிருந்த அன்புவின் முகத்தை பார்த்தவர் குற்றவுணர்வு மேலோங்க  மன்னிச்சிடுமா….நான் தான் தப்பு பன்னிட்டேன்.என்று கைகூப்பி நிற்பதை  தவிர வேறு வழியில்லை அவருக்கு. அவர் மேலும் இங்கு நின்றால் தனது சொந்தங்கள் சொற்களால் குத்தி குதறிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ
சரி நீங்க கிளம்புங்க .என்று  சிவகாமி  சொல்ல அவரது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஏன்மா அவங்கள அனுப்புன? இப்ப என் அண்ணனுக்கு யாரு பதில் சொல்லுவா?
நீயே விட்டாலும் நான் அவங்கள சும்மா விடமாட்டேன். சந்தியா மீண்டும் ஆவேசமாக

அட….  நிறுத்து டீ  அவளது மாமியார்

அதான் உங்கம்மாவே அவங்கள அனுப்பிட்டாங்களே.அப்புறம் என்ன குழந்தைய தூக்கிட்டு வீட்டுக்கு கிளம்பி வா வீட்டுக்கு என

முடியாது.இதுக்கு ஒரு முடிவுத் தெரியாம நான் இங்கிருந்து வர மாட்டேன்.இது என் அண்ணன் வாழ்க்கை

என்னடி பெரிய அண்ணன்.கல்யாணமாகி மூனு மாசம் கூட ஆகலை.அதுககுள்ள பொண்ணு வீட்டை விடு ஓடிடுச்சுனா, அந்த பொண்ணு மேல மட்டும் தப்பு இருக்க மாதிரி தெரியல எனக்கு.உங்கம்மா என்ன  கொடுமை பண்ணியிருப்பாங்களோ இல்ல உங்கண்ணன் என்ன செஞ்சானோ?

அக்கா நீ வேற கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கா என்று  யாரோ சொல்ல

நீங்க சும்மா இருங்க.எந்த பொண்ணுதான் இந்த காலத்துல கல்யாணத்துக்கு முன்னாடி  காதலிக்காம இருக்குது.கல்யாணத்துக்கு அப்புறம் அதனதன்  வாழ்க்கையை ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்திட்டு போகலையா?
அவ தான் தெளிவா எழுதியிருக்கா ல எல்லா பொண்ணுஙக மாதிரியும் கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்க ஆசப்பட்டேன் ஆனா முடியல.அப்போ குறை பொண்ணுக்கிட்ட மட்டுமே…… இல்லை. அவள கல்யாணம் பண்ண பையன்கிட்டயும் இருக்கு.அவள மட்டும் குத்தம் சொல்றதுல என்ன நியாயம் ? என்று அவர்  முடிக்கவும் சிவகாமி சரிந்து விழவும் சரியாய் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here