20. அவளின் ஒற்றை முத்தம்_ 11.9_மித்ரா பரணி

0
552

அவளின் ஒற்றை முத்தம்

ஒற்றை முத்தம்
அவன் அதரங்களில்
ஆழமாய் அழுத்தமாய்

என்னை விட்டுச் செல்லாதே
என்றதோ?

இல்லை

முளைத்திருக்கும்
களைச் செடிகளைக் களைந்து வா

வீரதீர செயல்கள் புரிந்து வா

வெற்றி வாகை சூடி வா

கைகளில் ஆயுதம் தரித்து
கம்பீரமாய் எல்லையில்
உன்னோடு வலம் வரும் வரம்
வாய்க்கவில்லை எனக்கு

அதனாலென்ன..!

நீ நம் நாட்டைப் பார்
நான் நம் வீட்டைப் பார்க்கிறேன்

தாய் நாட்டிற்காக உன் கடமையை ஆற்றி
வா என் தலைவனே

உன்னை வரவேற்கக் காத்திருப்பேன்
கரைகாணா காதலுடன் என்றது

அவளது ஒற்றை முத்தம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here