47. இதழ்வலி_8.6_ஆஹிரி

0
697

இதழ்வலி

இதயக்கூட்டின் 

ஏதோஓர்புள்ளியில்

விரவிக்கிடக்கும் 

என்உயிர்வரை..

உறிஞ்சிக்கொள்கிறாய் 

என்உதடுகளின்வழி..

முத்தம்என்று 

கூறிக்கொண்டே!!!

நீர்தேடும்வேர்களாய் 

அதுநீண்டுகொண்டே

செல்வதாய்..

கண்கள்கலங்கி..

மூச்சுமுட்ட.. 

பற்றுக்கோலென 

உன்வலியதோள்கள்!!!

சிறுதுளியாய்என்இதழ்கள்..

பாலைவனமணலென

உறிஞ்சிக்கொள்கிறாய்..

உன்தாகம்தீர்க்க

நான்அடைமழைஇல்லையடா

ஒருகணமேனும்

விட்டுவிடு..

பிழைத்துப்போகிறேன்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here