“நேனு நின்னு ஆத்மார்த்தமாக ப்ரேமிஸ்துனானு”
தடுமாறிய அவன்…
தயங்கிய அவன்…
புன்னகைத்த அவன்…
கோபம் கொண்ட அவன்…
முட்டுக்கட்டையாக இருந்த அவன்…
ஏறுக்கு மாறாக நடந்துக் கொண்டிருந்த அவன்…
விளையாட்டுப் போல பேசுகின்ற அவன்…
அவளை கட்டுப்படுத்துகின்ற அவன்…
அவளை அதிகாரம் செய்கின்ற அவன்…
அவளுக்கு தேவை என்றபோது ஓடி வந்த அவன்…
இன்னும் என்னென்னமோவாக எங்கும் எதிலும் அவனாக ஆக்கிரமிக்க…
“இன்னிக்கு இது நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டுமே?” அவள் சொன்னது நினைவுக்கு வரவும் தன் தலையில் தானே பொட்டென ஒன்றை போட்டுக் கொண்டாள் மீரா.
கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க, அழுது விடக் கூடாதெனும் முயற்சியோடு வெகு பிரயத்தனப்பட்டு ரெஸ்ட் ரூம் சென்று உள்ளே அடைத்துக் கொண்டு விம்மினாள்.

