Category: Short Stories
-

Peraanmai_Short story_Jansi
பேராண்மை_ சிறுகதை_ஜான்சி பேராண்மை சிறுகதை எழுத்தாளர்; ஜான்சி அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே,அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ‘ச்சேச்சே….…
-

8. Suvar_Short story_Jansi
சுவர்_ சிறுகதை_ஜான்சி சுவர் சிறுகதை ஜான்சி அந்த அழகிய கிராமத்தின் அதிகாலை நேரம் இனிய பறவைகளின் கானத்துடன் இனிதே ஆரம்பித்து இருந்தது. அங்கே அந்த ஊருக்கே பெருமையாக கருதப்படும் மாதா கோவிலில் காலை ஆறு மணி *திருப்பலிக்கான முதல் மணி சற்று முன்பு அடித்து ஓய்ந்து இருந்தது. அப்படியெனில் கடிகாரம் பார்க்காமலேயே கூட இப்போது அதிகாலை ஐந்தரை மணி எனக் கொள்ளலாம். அடுத்து, இரண்டாம் மணி ஐந்தே முக்காலுக்கும் மூன்றாவது மணி ஆறுக்கும் என 15 நிமிடங்களுக்கொரு…
-

Manidha Attaigal_Long-Short story_Jansi
மனித அட்டைகள்_ நெடுங்கதை_ஜான்சி மனித அட்டைகள் நெடுங்கதை எழுத்தாளர்: ஜான்சி வானம் இருட்டிக் கொண்டு பொழிந்துக் கொண்டிருந்தது. கூரையை தாண்டி மழையும் மேகமும் வீட்டிற்குள் பாய்ந்து விடும் போலொரு முனைப்பில் இருந்திருக்குமோ? காலத்தில் பொழிவது அதன் வேலைதான், ஆனால், அதென்ன மாதக் கணக்காக பொழிவதாம்? நல்ல வீடும் கூரையும் இல்லாதவர்கள் குறித்து இந்த மழைக்கும் கவலை வேண்டாமா? ம்ம்.. வீட்டில் இருக்கும் மனிதர்களுக்கே பொறுப்போ கவலையோ இல்லையாமாம் இதில் மழையை சலித்து, மழைக்கு புத்தி சொல்லிக் கொண்டு……
-

6. Mudan muraiyaga paartha pothu…_ Short Story_Jansi
6. முதன் முறையாக பார்த்த போது…_சிறுகதை_ஜான்சி முதன் முறையாக பார்த்த போது… தெரியாத்தனமா இந்த கார்ல ஏறிட்டோம் போலிருக்கே?!!, இப்போ என்னச் செய்யிறது என்று சரண்யா பதட்டத்தில் தன்னுடைய நகத்தைக் கடிப்பதா இல்லை வேண்டாமா? என்கிற முக்கிய ஆலோசனையில் விரல்களை வாய்க்கு கொண்டுச் செல்வதும், ச்சீ எச்சி என எண்ணியவளாக திருப்புவதுமாக இருந்தாள். பெற்றோர்கள் ஒரு மாதம் முன்னரே ஊருக்கு வந்திருக்க, தம்பியோடு கல்லூரியின் இறுதித் தேர்வை எழுதி முடித்து ஊருக்கு வந்தவளுக்கு வந்த ஒரு வாரத்தில்…
-

Ullathai Kollai Kondaai_Short Story_Jansi
உள்ளத்தை கொள்ளை கொண்டாய்_சிறுகதை_ஜான்சி உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய் எழுத்தாளர்: ஜான்சி அழகான மாலைப் பொழுது அந்த இல்லம் மட்டும் உறவினர்களின் வருகையால் கலகலப்பாக காணப்பட்டது. அவ்வீட்டின் தலைவர் ராமானுஜம் வேலையாட்களுக்கு பரபரப்பாக ஆணைகள் பிறப்பித்தவாறு வீட்டின வாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். “ஆதவன் வெட்ஸ் அகிலா”ன்னு திருமணத்துக்கு முந்தின நாளே இங்கே அழகா பொருத்திடுங்க சரியா? என்றவருக்கு அவர் மனைவியின் அழைப்பு கேட்கவே விரைந்தார். ஏங்க உங்க பையனை இன்னும் காணோம் காலையிலதானே யூ எஸ்ஸிலிருந்து வந்தான்.ஆஃபீஸ் போய்…
-

4. Naan En Seiven?_Short Story_Jansi
4. நான் என் செய்வேன்?_சிறுகதை_ஜான்சி நான் என் செய்வேன்? என் செய்வேன்… வெகு நாளாய் எவர் முகமும் காண, எனக்குள் இத்தனை ஆர்வம் துளிர்த்ததில்லை. வெகு சில நாளாய் உன் முகம் கண்டிடவே முகமும் அகமும் மலர்கின்றது. ஆண் என்றாலே அதட்டல் தான் காரணமில்லா அரட்டல் தான் என்று பதிவிட்டிருந்த என் மனதோடு உந்தன் கருத்துக்கள் தவறென்று சொல்லிச் சென்றது உன் வருகை. அரங்கம் நடுவில் நீ நின்று உந்தன் கருத்தைப் பகிர்கையிலே, அவை அதிராத மென்மையில்…
-

3. Ennamo Nadakkuthu!?_Short Story_ Jansi
3. என்னமோ நடக்குது!?_சிறுகதை_ஜான்சி இரவின் நிறம் சுற்றிலும் விரவி நிற்க , அடர்ந்த வனத்தின் அருகாமையில் அமைந்திருந்த அந்த காவலர் குடியிருப்பைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் குளிர்ந்தக் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது.வானில் தேய்பிறை நிலவும் அமாவாசைக்கு மூன்றே நாள் இருக்கின்றது என நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் இடது ஓரத்தில் அமைந்துள்ள அபார்ட்மெண்டினுள் இப்போது என்ன நடைப்பெறுகின்றது என்று நாம் பார்க்கலாமா?. ஆந்த வீட்டின் கதவைத்தாண்டி வரவேற்பரையின் உள்ளே நுழைந்து கடந்துச் சென்றால் முதல்…
-

2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி
என்ன அதிசயம்! எந்தன் உயிருக்குள் உந்தன் பார்வைகள் நீர் வார்த்ததுமே… எந்தன் மன வெம்மைகள் மாயமாகினவே. என்ன அதிசயம்! எந்தன் கனவுக்குள் உந்தன் கனிவுகள் காட்சியானதும்… எந்தன் மன வெறுமைகள் நிறைந்து தளும்பினவே. என்ன அதிசயம்! எந்தன் வாழ்க்கைக்குள் உந்தன் வரவுகள் அடியெடுத்து வைத்ததுமே… எந்தன் வெற்றிகள் வசப்பட்டனவே. வாழ்வும் நீ “வளி”யுமானவளே. அந்த அறையை கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே அந்த அறை அப்படித்தான் இருக்கின்றது. முழித்திருக்கும் தருணங்களில் எல்லாம்…
-

1. ரௌடி ராக்கம்மா _ சிறுகதை _ ஜான்சி
Rowdy Rakkamma_Tamil Short Story_Jansi ஒரு நொடி அழுகின்றாய் மறு நொடி சிரிக்கின்றாய்… உனக்கென்ன? நொடிக்கொரு முறை செத்து செத்து பிழைப்பவன் நானல்லவா? பிரபாகர் அவளை ஆழ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கூட இந்த சூழ் நிலையில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென்று சுத்தமாக புரியவில்லை. அழுதுக் கொண்டிருந்தவள் குழலி, அவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசிக்கின்றனர். அவனை பொருத்த வரையில் ஒன்னா நம்பர் கிறுக்கி. எதற்கெடுத்தாலும் காச்சு மூச்சென்று கத்துவதும், ஓவென அழுகையை வைப்பதுமாக அவளிடம்…
