“எதற்காக?” எனும் கேள்வி இவளது மனதில் தொக்கி நிற்க
“கொஞ்ச நேரம் தான், நாளை மதியம் 3 மணிக்கு மால் வர்றியா?” அழைத்தான். மீராவிற்கும் இதற்கொரு ஒரு முடிவு காண வேண்டும் எனத் தோன்றி விட்டிருந்தது.
‘நல்லவேளை இப்போது உடனே பேச வேண்டும் எனச் சொல்லவில்லை’ மனதிற்குள்ளாக ஆசுவாசம் கொண்டாள். ‘நாளைக்குத்தானே முன் தயாரிப்போடு வரலாம்’ எனும் எண்ணத்தோடு இருந்தவளது கரம் வெம்மையுற்றது. அவன் தான் அவளது விரலின் காயங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
அழகான அந்த விரல்களில் காயங்களால் சில தளும்புகள் இருந்தன. “ம்ம் பரவாயில்லை, ஆறிடுச்சு. நாளைக்கு பார்க்கலாமா?” கண்ணாடியை அணிந்தவன் இலகுவாக எழுந்துக் கடந்துச் சென்றான்.
வீட்டிற்கு வந்தவளுக்கு படபடப்பாக இருந்தது. வழக்கம் போல சுத்தம் செய்து வந்தவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் என்னச் சொல்லப் போகிறான்? அதற்கு மறுத்து இவள் என்னச் சொல்லப் போகிறாள்? என மனதிற்குள்ளாக கூட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவளால் வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது.
“நோ மீன்ஸ் நோ” முனகினாள், அவளோடு அவளது உணர்வுகளும், நினைவுகளும் கூடத்தான் முனகின… “நோ மீன்ஸ் நோ”.
தொடரும்

