அதிகாலையில் பால்காரர் வந்து கதவைத் தட்டவும், வழக்கம் போல பால் பாக்கெட் வாங்கி திரும்பியவள் அவர் அங்கிருந்து செல்லாமல் ஏதோ சொல்ல நினைப்பதைப் பார்த்து விசாரித்தாள்.
“அம்மா கொஞ்சம் கவனமா இருங்கம்மா.. கொஞ்ச நாளா இங்க யாரோ நடமாடிட்டு இருக்கிறதை கவனிச்சேன். இப்பக் கூட. நான் வரும் போது உங்க வாசலில இருந்து ஓடிப் போற மாதிரிச் சத்தம் கேட்டது” என்றுச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
“என்னடா இது? இந்த வீட்டில ஒரே மர்மமா இருக்கு … இந்த மனுஷன் நான் பேய்னு சொன்னா நம்பவும் மாட்டாரு. சும்மாவே நம்மள முட்டாளுன்னு நினைச்சு வச்சிருக்குதுங்க, இதில் இந்த பிரச்சனையும் சொன்னா அவ்வளவுதான்” என்று எண்ணியவாறு உள்ளே வந்தாள்.அந்த நேரம் மகன் ஷாமை எதிர்பாராததால்.
“என்னடா இது அதிசயமா இருக்கு? ஷாம் என்னடா இன்னிக்கு சீக்கிரமா எழுந்திட்ட?” எனக் கேட்டாள்.
“அம்மா வார்(War) மா, இந்த டைமுக்கு தான் இருந்தது அதான்…”
“என்னது வாரா?..”
“என்னம்மா உங்களுக்கு ஒண்ணும் புரிய் மாட்டேங்குது?”
“எனக்கு ஒன்னும் தான் புரியலை, இப்ப என்ன? விபரம் சொல்ல மாட்டியா என்ன?”
“Clash of Coins க்ளாஷ் ஒஃப் க்ளான்ஸ் விளையாடிட்டு இருக்கேன்.. நீங்க டிஸ்டர்ப் செய்யாதங்கம்மா..கான்ஸண்ட்ரேஷன் போயிடும். நான் தோத்துப் போயிடப் போறேன்.”
“இப்ப உன்னை தொந்தரவு செய்யறதுதான் என் வேலை பாரு… படிக்கறதுக்கு என்னிக்காச்சும் இப்படி எழும்பி இருப்பியா? கேமாம் கேம்” சலித்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபட்டவாறே தன் கதவருகே நடமாடுவது யாராக இருக்கும் என்றுச் சிந்தித்துக் கொண்டு இருந்தாள,
குப்பையை எடுக்க வருபவருக்கு கொடுக்க குப்பைக் கூடையை கையில் பிடித்தவாறே சிந்தனையில் கதவைத் திறக்க, எதிரில்,
“ஆஆஆஆ..” என பபிதா கத்துவதற்கு முன்பாக
“ஆண்டி ஆண்டி நான் தான்”, எனப் பதறினான் பக்கத்து வீட்டு பிரபு.
“என்னடா இது என்ன செய்யுற நீ?”
“ஆண்டி அது…” எனச் சொல்லும் முன்னே உள்ளிருந்து ஷ்யாமின் குரல்,
“வாங்க பிரபுண்ணா , நாம இந்த தடவ ஜெயிச்சுடுவோமில்ல?..” கேட்டவனுக்கு பதிலாக,
“யெஸ், யெஸ்” என குதுகலித்தவனைப் பார்த்து,
“ஏன்டா பிரபு? இந்த வருஷம் பன்னிரெண்டாவது படிக்கிற நீ இவன் கூடச் சேர்ந்து விளையாடினா எப்படி?” என்க ,
“போம்மா பிரபுன்னா தான் எங்க லீடர் தெரியுமா, அவங்க கஷ்டப் பட்டுக் கொடுக்கிற ஸ்ட்ராடஜில தான் நாங்க ஜெயிக்கிறோம் தெரியும்ல..அவங்க வீட்டில வைஃபை(Wifi) கூட ஒன் வீக்கா வேலைச் செய்யல, நாந்தான் நம்ம பாஸ்வர்ட் கொடுத்திருக்கேன் தெரியுமா? எவ்வளவு கஷ்டப் பட்டு செய்யுறத இப்ப்டிச் சொல்லிட்ட… போமா உங்களுக்கு ஒண்ணும் தெரியல…”
“ அப்போ நீயா அது? ஏன் பிரபு கதவுக்கு பக்கத்தில ராத்திரி, அதி காலைல நடமாடுனது நீயா? என்னடா இது இப்படி பயமுறுத்திட்ட?…”
“ஹி ஹி ஆண்டி அது உங்க கதவு கிட்ட தான் ஒழுங்கா நெட் கனெக்ட் ஆச்சுதா அது தான்.”
“ வைஃபை பாஸ்வர்டா கொடுக்கிற மகனே? உன்னைப் பார்த்துகிறேன்..” முறு முறுத்தபடிச் சென்றாள் பபிதா.
முற்றும்.

