உள்ளத்தை கொள்ளை கொண்டாய்_சிறுகதை_ஜான்சி

உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய்
எழுத்தாளர்: ஜான்சி
அழகான மாலைப் பொழுது அந்த இல்லம் மட்டும் உறவினர்களின் வருகையால் கலகலப்பாக காணப்பட்டது. அவ்வீட்டின் தலைவர் ராமானுஜம் வேலையாட்களுக்கு பரபரப்பாக ஆணைகள் பிறப்பித்தவாறு வீட்டின வாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். “ஆதவன் வெட்ஸ் அகிலா”ன்னு திருமணத்துக்கு முந்தின நாளே இங்கே அழகா பொருத்திடுங்க சரியா?
என்றவருக்கு அவர் மனைவியின் அழைப்பு கேட்கவே விரைந்தார்.
ஏங்க உங்க பையனை இன்னும் காணோம் காலையிலதானே யூ எஸ்ஸிலிருந்து வந்தான்.ஆஃபீஸ் போய் லீவ் எடுக்கும் முன்னால வேலை எல்லாம் ஒப்படைச்சிட்டு வாறேன்னு சொன்னவனை இன்னும் காணல……
வந்துடுவான் ராஜி ..நீ கவலைப்படாதே அவன் வேலை பற்றி உனக்கு தெரியாதா என்ன?
எனக்கு தெரியும்ங்க ஆனால் உங்க அக்கா கேட்கிற கேள்விக்கு தான் என்னால பதில் சொல்ல முடியல. நிச்சயத்துக்கு தான் அவனால வர முடியல சரி பூ வச்சி நிச்சயம் செய்து வந்தோம் இன்னும் 10 நாள்ல கல்யாணம் இன்னும் வீட்டுக்கு வரல ஒரு வேளை அவனுக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லையான்னு கேட்கிறாங்க..
என்ன ராஜி இது உனக்கு மரகதம் அக்கா பற்றி தெரிஞ்சும் இப்படி புலம்பலாமா? அவ எப்பவுமே அப்படித்தான ……..சரி இப்போ எனக்கு ஒரு டவுட்டு …..
என்னங்க……
இல்ல ஆதி க்ளாஸ் ஃபர்ஸ்ட் வர்றப்போ எல்லாம் என்ன சொல்லுவ …….
என்ன சொல்லுவேன்
என் மகனை பார்த்தீங்களான்னு பெருமை பேசுவே ….
ஆமா பேசுவேன்தான் இப்ப அதுக்கென்ன …
நம்ம நிர்மலா கல்யாணத்தப்போ “பார்த்தீங்களா என் மகன் அவன் தங்கச்சி கல்யாணத்தை எவ்வளவு பொறுப்பா நடத்திட்டான்னு சொன்னே” ….
அவர் என்ன சொல்ல வருகிறாரென்று புரியாமல் ராஜி அமைதி காக்க
இப்போ கல்யாண பேச்சு நடக்கிறப்போ கூட ,
அம்மா, நீங்க யாரை சொல்றீங்களோ அந்த பெண்ணை கட்டிக்கிறேன் நீங்க பார்த்து முடிவு சொன்னா போதும்னு சொல்லிட்டான் , என் மகனை மாதிரி ஊர் உலகத்தில ஒரு பிள்ளை உண்டான்னு பெருமை பேசினேயில்லே …..
ஆமாங்க இப்போ அதுக்கென்னவாம் சிடு சிடுப்பு மாறி குரலில் கொஞ்சல் வந்திருந்தது.
ஆனா இப்போ குறை சொல்லும் போது மட்டும் உங்க மகனைன்னு சொல்றியே அது எப்படி? என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்.
போங்க உங்க கிட்ட வந்து சொன்னேன் பாருங்க பொய்யாக சலித்தவாறு சென்று விட்டார்.
வாசலில் காரின் சத்தம் கேட்டதும் நிர்மலா தன் அண்ணனை வரவேற்க விரைந்தாள் .ஆதி அண்ணா என்றவளை வரவேற்றவாறு இறங்கினான் ஆதி என்கிற ஆதவன் நம் கதையின் ஹீரோ ஆறடி உயரமும் மாநிறமுமாக ஹாண்ட்சமாக இருந்தான். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை காரணமாக அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி பறந்தாலும் தன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்கள் கொண்டவன்.
அவனிடம் இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் அவன் ஒரு மகா & மெகா கஞ்சப் பேர்வழி செலவழிப்பதில் இல்லைங்க பேசுவதில்.வீட்டில் தன் தாய் சகோதரியோடு பேசுவதோடு சரி அலுவலகத்திலும் கூட அநாவசியமாக பெண்களிடம் பேசியது கிடையாது.ஒரு சில குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் தான் அவனுக்கு நெருக்கம்.
ஒரு வாக்கியம் பேச வேண்டிய இடத்தில் ஒரு வார்த்தையில் பேசுவான். ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் உடல் மொழியாலே உணர்த்தி விட்டு நகர்ந்து விடுவான் (சரி சரி ரொம்ப போரடிக்காதே மணி ரத்னம் சார் பட ஹீரோ மாதிரின்னு சொல்வியா அத விட்டுட்டு என்று உங்கள் பற்கள் நற நறக்கும் சத்தம் கேட்குது…ஹி ஹி)
சரி ஹீரோ இன்ட்ரோ ஆகியாச்சி எவ்வளவு நேரம் தான் அவங்களை ஃப்ரீஸ்ல வைக்கிறது.
பேக் டூ நிர்மலா & ஆதி ..
நிம்மி எப்போ வந்தே காலையிலே உன்னை காணவேயில்ல ..
நான் மதியம் வந்தேன் அண்ணா அவருக்கு லீவ் கிடைக்கல இல்லன்னா 2 நாள் முன்னே வந்திருப்பேன்..
உன் குட்டி வாலு பிரணவ் எங்கே?
அப்போது மாமா என்றபடி ஓடி வந்தான் 3 வயது பிரணவ்….
வாடா என்ன வச்சிருக்கே கையிலே?
மார்பில்ஸ் மாமா நாங்க விளையாடித்து இருக்கோம் என்று தன்னுடன் இருந்த மற்ற குட்டிப் பிள்ளைகளை காட்டினான்.
ஓ விளையாடுங்க நான் உங்களுக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன் .
மாமா சாக்லேட்… என்று உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்தவனை கைகளில் தூக்கிக் கொண்டான்.

