Category: Novels
-

Epi 32_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 32_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 32 விகாஷ் ஆனந்திடம், “நான் வஹிணிக்கு அழைச்சு பேசினது நம்ம நல்லதுக்காகத்தான் …” எனச் சொல்லவும் ஆனந்த் முறைத்ததில் அமைதியானான். “நீ செய்ததால என்னாச்சுன்னு உனக்கு தெரியுமா?” “என்னாச்சு?” “அவ சொல்ல வேண்டியதையெல்லாம் கூட என் கிட்ட சொல்லாம மறைச்சு, எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அமுக்கி, பைத்தியக்காரி மாதிரி பெனாத்துரா” “சாரி சாரி, ஆனந்த் எனக்கொன்னும் புரியலை ஆனால், நிச்சயமா தப்பா நினைச்சு அப்படி சொல்லலை. அந்த நேரம்…
-

Epi 31_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 31_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 31 ஆனந்த் தனது உழைப்பின் பயனை கண் கொண்டு பார்க்க பார்க்க பிரமிப்பாக உணர்ந்தான். ‘அம்மா உன் மகன் உன் விருப்பம் போல தனது இலக்கின் அருகே…’ மனதினூடாக கண்மூடி அம்மாவை நினைவிற்கு கொண்டு வந்தான். மனதிற்குள்ளாக அத்தனை நிறைவு, இன்னும் சில நாட்களில் அவன் விருப்பம் போல எல்லாம் நிகழவிருக்க அவனது மகிழ்ச்சிக்கென்ன குறைவு? விகாஷ் ஆனந்த் அருகில் வந்தவன். “யோ ப்ரோ” என கைத்தூக்க இருவரும்…
-

Epi 30_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 30_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 30 “ஹலோ” “ஹலோ பாப்வி திஸ் இஸ் லிண்டா” “ஓகே வொய் டிட் யூ கால்ட் மீ?” (எதற்காக எனை அழைத்தாய்) இனி உரையாடல் தமிழில், “நான் ஆனந்தை திருமணம் செய்வதாக இருக்கிறேன்” “அதற்கு நீ அவரிடம் அல்லவா பேச வேண்டும்? என்னிடம் ஏன் வந்து பேசுகின்றாய்? ஏன் என்னை திட்டுகின்றாய்? தேவையில்லாமல் இத்தனை புகைப்படங்களை எனக்கு ஏன் அனுப்புகின்றாய்” “புகைப்படங்கள் அனுப்பினால் தானே உனக்கு எங்கள் உறவு…
-

Epi 29_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 29_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 29 அன்று அலுவலகத்திலிருந்து சம்பூர்ணா திரும்பி வந்தாள். வந்தவள் வழக்கம் போல தங்களது வீட்டிற்குச் செல்லாமல் கணவனின் வீட்டின் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று அடைத்துக் கொண்டாள். சுத்தம் செய்து உடை மாற்றி வந்தவள் தாங்கள் இருவரும் சில நாட்கள் சொர்க்கத்தில் இருந்த தங்களுடைய அந்த தனிப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். அது ஊரில் இருந்த ஆனந்தின் அறையின் அமைப்பை ஒத்த அறை. ஊரும், திருமணமும் அதற்கடுத்த நாள்களும்…
-

Epi 28_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 28_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 28 சம்பூர்ணா லிண்டா அவளுக்கு அழைத்து கத்திய நாளைக்கு பின்னர் கடந்த சில நாட்களாக இரவு கணவனுடன் பேசிய பின்னர் அலைபேசியை அணைத்து விடுவதால் நிம்மதியாக தூங்கி எழுந்தாள். அவளை இரவு நேரத்தில் ஆனந்த் அழைப்பதில்லை என்பதால் தனது அலைபேசியை அணைத்து வைப்பதில் அவளுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை ஏற்படவில்லை. எனினும் தினம் தோறும் பகலில் எழுந்ததும் அலைபேசியை இயக்க ஆரம்பித்ததும் அவளது அலைபேசிக்குள் லிண்டா அனுப்பிய புகைப்படங்கள்…
-

Epi 27_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 27_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 27 சம்பூர்ணா தனது அலைபேசியில் விகாஷ் காய்க்வாட் என தான் சேமிக்காத எண்ணிலிருந்து அழைப்பு பெயருடன் வருகின்றதே எனும் ஆச்சரியத்துடன் பார்க்கும் போதுதான் ஆனந்தின் மின்னஞ்சல் கணக்குகள் தனது அலைபேசியில் இருப்பதை நினைவு கூர்ந்தாள். [குறிப்பு: மின்னஞ்சலில் அலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டால் அந்த கணக்கு இருக்கும் எந்த அலைபேசியிலும் குறிப்பிட்ட எண்களை எடுத்தாள முடியும்) அழைப்பை எடுத்தவள் “ஹலோ” சொல்ல, “பூர்ணா வஹிணி நலமா?” கேட்டவனின் குர்லில் மருந்திற்கும்…
-

Epi 26_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 26_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 26 மூளை மந்தித்து போகும் நிலை என சம்பூர்ணா கேள்விப் பட்டிருக்கின்றாள். ஆனால் அதை அவள் அதனை முதன் முறையாக உணர்ந்துக் கொண்டிருந்தாள். அப்போதைய நிலையில் அவளது நெஞ்சடைத்துப் போக, மூச்சு விடவே சிரமமாக இருக்கும் போலிருந்தது. கண்கள் தன் பாட்டிற்கு தனது சுரப்புகளை தீவிரப் படுத்தி இருந்தன. தாய் இறந்த போது கூட ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலாத இரண்டும் கெட்டான் பருவம். நிகழ்ந்த துயரம் உணர்ந்து…
-
Epi 25_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 25_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 25 சம்பூர்ணாவிற்கு இரவாகியும் தூக்கமே வரவில்லை, அவளது தூக்கத்தை அவள் கணவன் தான் களவாடி சென்று விட்டிருந்தானே? தனது கைகளில் இருந்த அலைபேசியை அவள் எத்தனையோ முறையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த அலைபேசி இரு நாட்கள் முன்பு வரையிலும் ஆனந்த் உபயோகித்து வந்தது. அவனது அலைபேசி இவள் கையில் வந்த கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. இவர்கள் டெல்லி வந்ததும் மனைவிக்கு தெரியாமல் பரிசளிப்பதாக எண்ணி இவன் சமீபத்திய…
-

Epi 24_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 24_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 24 மதிய உணவு வேளைக்கு காலம் தாழ்த்தி வந்த தம்பதியரை கிண்டல் செய்ய சீண்டவென்றே வந்திருந்தனர் இவர்கள் உறவினர்கள். இரட்டை அர்த்த பேச்சுகளும் கிண்டல்களும் என அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சம்பூர்ணா தலை தாழ்த்தியே அமர்ந்திருக்க, ஆனந்த் உணவு உண்டு எழுந்ததும் ஒன்றும் அறியாதவனை போல அங்கிருந்து வெளியே சென்று விட்டிருந்தான். “மூக்கொழுகி சம்பூர்ணா அமைதியா இருக்கான்னு நம்பாதீய மக்களே சொல்லிப்புட்டேன்” “அக்கா” இவள் பேச்சைதான் யாரும்…
-

Epi 23_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 23_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 23 கிராமத்தின் சேவல் கூவ அந்த பொழுது விடிந்திருந்தது. கண்கள் திறந்து பார்த்தவளுக்கு தான் இருக்கும் இடமும், பொருளும் புரிய சற்று நேரமாகி இருந்தது. ஒரு வாரத்திற்குள்ளாக தனது வாழ்க்கை ஹை ஜம்ப் அடித்து உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டதான வியப்பில் இருந்தாள். “என்ன கிள்ளி பார்க்கணுமா?” அருகிருந்தவன் இவள் கன்னத்தை கிள்ளி வைக்க கன்னத்தை தடவிக் கொண்டே திரும்பி படுத்தவள் “நீங்க முழிச்சிட்டீங்களா அத்தான்?” கேட்டாள் “ம்ம்……
