Epi 8_Thurathum Nizhalgal_Jansi

அத்தியாயம் 8_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 8

“யார் நீ?”

தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போல திரு திருவென முழித்தாள் ரிஷா.

அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். ‘அவனா இவன்?’ எனும் வியப்பு ஓங்க அவனைப் பார்த்தாள்.

“நீ லாயரா இந்தர்?”

“ம்ம்…” என்றான் அமர்த்தலாய்

வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் அசைத்தது.

“நீ யார்னு சொல்லவே இல்லியே?”

“நான்.. நான் ரிஷா, ரிஷா சண்முகம்” என்றாள் பதட்டமாக,

“ம்ம்…” என்றவன் அவள் பேச தயங்குவதைப் பார்த்து,  “அந்த டிரைவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீ பேசுவதற்கு தயங்காதே” என்றவன், “சரி நான் முதலில் என்னைப் பற்றிச் சொல்லுறேன். அப்பதான் உனக்கு என் மேல் நம்பிக்கை வரும்.”

“நான் ஒரு லீடிங்க் லாயர் கிட்டே ஜீனியரா பணி புரிகிறேன். என்னோட லாயர் எனக்கு முதன் முதலா சக்ஸேனா கேஸை எனக்குத் தந்தார். தன் கீழே வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஓரு ஸ்டாஃபை பல முறை வலுக்கட்டாயமாக வல்லுறவு செய்ததான அந்த கேஸ் எத்தனையோ பேர் எடுக்காமல் விட்டிருக்க, உண்மைக்கு குரல் கொடுக்கிறதாக நினைத்து சவாலாகவே அந்த கேஸை எடுத்துக் கொண்டேன்.”

“நான் அந்த கேஸ் எடுத்ததிலிருந்து தன்னோட பண பலத்தால எத்தனையோ முறை அந்த கேஸ் சரியான முறையில் நடத்த விடாம அவர் முயற்சி செஞ்சாலும் அவரால என்னை தடுக்க முடியலை. அந்த கேஸ் என் முதல் கேஸ் ஆனதால் என்னிடம் இருந்த அதீத ஆர்வமோ? நீதியின் பால் நான் கொண்டிருந்த தணியாத தாகமோ என்னமோ? நான் ரொம்பவே முயற்சி செய்து சக்ஸேனாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்திட்டேன்.”

என்றவனை பாராட்டுதலாக பார்த்திருந்தாள் ரிஷா.

“ஆனால், என்னிக்கு அந்த சக்ஸேனா ஜெயிலுக்கு போனானோ அன்னியிலிருந்து எனக்கு எம கண்டம், ராகு காலம் இன்னும் என்னென்ன கெட்டதோ அத்தனையும் ஆரம்பிச்சிடுச்சு. எங்கே போனாலும் ஆட்கள் அடிக்க துரத்தினானுங்க.”

“ஒரு தடவை என் வீட்டிலயே தாக்குதல் நடந்துச்சு. என் கூட இருந்த மத்த ரூம் மேட்ஸ் நீ வேற இடத்துக்குப் போன்னு கையெடுத்து கும்பிடற அளவுக்கு ஆகிடுச்சு. என்னோட பாஸ் அதான் அந்த லீடிங்க் லாயர் நம்ம வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். முதல் கேஸே நல்ல பரபரப்பான கேஸா அமைஞ்சிடுச்சு, வாழ்த்துகள்னு சொல்லி எனக்கு லீவும், கையில பணமும் தந்து ஒரு மாதத்துக்கு எங்கேயாச்சும் கண்ணுல படாம ஒளிஞ்சிருன்னு சொன்னார்.”

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!