“2 நாளைக்கு முன்னாடி எனக்கு என்னோட கஸின் பிரதர் கிட்டே இருந்து போன் வந்தது. அம்மா அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லாததாகவும் உடனே சென்னை வரும் படியாகவும் சொன்னாங்க.”
“…..”
ஷாரதா ஆண்டியும் அதே நேரம் கல்லூரிக்கு வந்து லீவு கேட்டுட்டு என்னைப் புறப்பட சொன்னாங்க. நானும் சென்னைப் போகப் போறதா நினைத்து தான் அவங்களோட புறப்பட்டேன். ஆனால், ஷாரதா ஆண்டி என்னை அழைச்சிட்டு வந்தது மும்பை இரயிலில். இப்பன்னு இல்ல எப்பவுமே ஷாரதா ஆண்டிகிட்டே நான் எந்தவொரு கேள்வி கேட்டாலும் அவங்க என் கிட்டே சரியான பதில் அல்லது காரணம் எதுவுமே சொல்லியது கிடையாது.”
“…..”
“அதனால அவங்க அழைச்சிட்டு போகிற மாதிரியே போகலாம் எப்படியாவது அம்மா, அப்பாவை பார்த்தா சரிதான்னு தோணினதால அவங்க கிட்டே விபரம் கேட்கவில்லை.”
“…..”
“ஆனால், ஷாரதா ஆண்டி பாதி பயணத்திலேயே என்னை விட்டு பிரிவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்றைக்கு மதிய வேளை இரெயிலில் அதுவும் மும்பை வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக சில கற்றைக் காகிதங்கள் கொடுத்து , கூடவே நான் என்னச் செய்யணும்னு என்ன செய்யக் கூடாதுன்னு சிலவற்றைச் சொல்லிக் கொடுத்து, என்னை உடையவே மாற்றி புர்காவை உடுத்த வைத்து அப்புறப்படுத்திட்டு சம்பந்தப் படாதவங்க மாதிரி என்னை விட்டு தள்ளி நின்னாங்க.”
“…..”
“எதற்காக இப்படி நடந்துக் கொள்ளுறாங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியவில்லை. ஆனால், என்னுடன் இத்தனை வருடங்கள் சாந்தமே உருவாக இருந்த ஷாரதா ஆண்டிக்கு குங்க்பூ எல்லாம் தெரியும் என்பதே நான் அதற்கு அப்புறமாகத்தான் அறிந்துக் கொண்டேன்.”
“…..”
“அப்போது நடந்த சண்டையில் தான் ஷாரதா ஆண்டி என்னை விட்டு பிரிஞ்சாங்க? என்று இரயிலில் நிகழ்ந்தவற்றைக் கூறியவள். அவங்க என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்னை இந்த விலாசத்துக்கு போகச் சொல்லிருக்கிறாங்கன்னு புரிந்ததால், நானும் அங்கே போகத்தான் முயற்சி செய்தேன்.”
“…..”
“நீ என்னை ஸ்டேஷனில் இறக்கி விட்டதும் நானும் டாக்ஸி பிடித்து போயிருந்திருப்பேன் தான் ஆனால், நான் யார் காரணமா இத்தனை வருடங்களா சிறை வாழ்க்கை வாழ்ந்தேனோ? அந்த ருத்ரபாண்டி அங்கிளை ஸ்டேஷனில் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. எனக்கு இந்த மும்பையில் தெரிந்த ஒரே நபர் நீதான். அதனால் நீ ஏறிய பஸ்ஸில் ஏறி நானும் உன் பின்னாடி வந்தேன்.”
“…..”
“நீ அந்த இருட்டில் பாதுகாப்பிற்காக ஒதுங்கி உட்கார்ந்திருந்த போலிருக்கு. அதனால் நான் நீ என் பார்வையில் படுகிற மாதிரி இடம் பார்த்து உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து உன்னிடம் வந்து உதவி கேட்கலாம்னு நினைச்சு இருந்தேன்.”
“…..”
பெருமூச்செழுந்தவளாய் தொடர்ந்தாள்.
“எனக்கு என்னைப் பார்க்கவே கேவலமா இருக்கு, சட்டுன்னு என்னச் செய்யணும் என்று என்னால தீர்மானிக்க முடியலை. உடனே பயந்து போய் இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சு நேரத்தை வீணாக்கினது மட்டும் இல்லாம உன்னையும் பிரச்சனையில் இழுத்து விட்டுட்டேன். என்னால உனக்கு தொந்தரவு தான் மன்னிச்சிரு இந்தர்.”
“ம்ம்ம்…” அமைதியாக இருந்தவன்.
“அதை விட்டிரு, நானும் தான் உன்னைப் பார்த்ததும் ஏதேதோ பேசிருந்தேன், விட்டிரு ….அண்ட் டோண்ட் வொர்ரி ரிஷா இனி உன் பிரச்சனை உன் பிரச்சனை இல்ல, நம்ம பிரச்சனை.”
“…..”
“ப்ரெண்ட்ஸ்”, அவன் நீட்டிய கையை ஆதூரமாக பற்றி கைக் குலுக்கிக் கொண்டாள்.
“ப்ரெண்ட்ஸ்” என அவனிடம் பதில் சொன்னவளின் முகம் வெகுவாய் மலர்ந்திருந்தது.
தொடரும்


Leave a Reply