Epi 1_Yavarum Kelir?!!!_Jansi

“சாரதா நீ?”

“நான் கர்நாடக் மாநிலம்… எங்கள் மாநிலம் இந்தியாவிலேயே அதிகமான காஃபிகள் விளைச்சலில் முன் நிற்கும் மாநிலமாம்… இதோ இப்ப கூகிள் செய்ததில் தெரிந்துக் கொண்டேன். ஐடி படிக்கிற நமக்கு இதெல்லாம்னு முன்ன எல்லாம் யோசிச்சதே இல்லைப்பா…”

“கர்நாடகாவில் இன்னும் பலவும் விளைவிக்கிறார்கள் மைதிலி வாசித்தாள்.”

பேசிக் கொண்டே தங்களது ட்ரெயினிங்க் ரூமில் வந்துச் சேர்ந்தனர். ஹெச் ஆர் ரெப்ரெசெண்டேடிவ் அரை மணி நேரம் தாமதமாக அடுத்த நிகழ்வு நிகழும் என்றுச் செல்லவும் அரட்டை தொடர்ந்தது.

“ஹே எல்லாரும் ஒரு விஷயம் கவனிச்சீங்களா?”

“இவன் நமக்கு பாடம் நடத்தியே கொன்னுருவான்பா” மற்றவர்கள் சிரித்தனர்.

“கேளுங்களேன் ப்ரெண்ட்ஸ்”

“கேட்கலைன்னா விடவா போற? சொல்லுப்பா ராஜா சொல்லு.”

“அசோக் ஊரில் விளைவது கடுகு எண்ணை சூடான இயல்புடையது. ஷீலுவின் மாநிலம் அதாவது கேரளாவில் தேங்காய் விளைச்சல்கள் மிக அதிகம். தேங்காய் எண்ணை குளிர்ந்த தன்மை உடையது.”

“இப்ப அதற்கு என்னவாம்?” சலித்தான் மற்றவன்.

“தேங்காய் விளைச்சலில் முன் நிற்பது கேரளம் மட்டுமில்லை… கர்நாடகா எங்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடும் தான்” கூறியது மைதிலி.

“சரிதான்… கடுகு எண்ணை சூடான இயல்புடையது… குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது குளிர் பனியில் வெடுவெடுத்துக் கொண்டு கழிய நேரிடும் இயற்கைச் சூழல் கொண்ட வட இந்தியப் பகுதியினர் தமது உணவில் உபயோகிப்பது கடுகு எண்ணைதான்.”

“ஆமாம் சரிதான்” என்ற அசோக் அதே நேரம் எங்கள் ஊரில் வெயிலும் மிக அதிகம் என்றான்.

“இந்தியாவின் தென் பகுதிகள் அதிகமாக குளிர் இல்லாத பகுதிகள் அதனால் இங்கு உணவிலும் உபயோகத்திலும் வெவ்வேறு வகை எண்ணைகள் உபயோகிக்கப் படுகின்றன. சூடான சூழலுக்கு ஏற்ப தேங்காய் எண்ணை உபயோகம் அதிகம்.”

அடுத்த பத்து நிமிடங்கள் என் மாநிலத்தில் விளைவன இவை… என் மாநிலத்தில் விளைவன அவை… என கூகிள் இவர்களின் தேடுதலில் அல்லோலப் பட்டது.

“நீங்கள் எல்லோரும் தமிழ் நாட்டைப் பற்றி சொல்லவே விடவில்லையே?” கோபித்துக் கொண்டனர் கபீரும், லதாவும்.

“சொல்லுங்க சொல்லுங்க… தெரிஞ்சுக்குவோம்.”

“கிழங்கு வகைகள்,முந்திரி,தேங்காய், காஃபி, டீ…” 

உரையாடல்கள் தொடர்ந்தன. 

ராஜா அனைவரையும் அமைதியாக்கினான்… சரி முன்பு கேட்ட அதே கேள்விதான் கேட்கப் போகிறேன். பதில் சொல்லுங்க, 

“நமது, உணவு வகைகளின் பழக்கம் எல்லாம் எப்படி எதனால் வந்திருக்கும் என்று இப்பொழுது நீங்க நினைக்கிறீங்க?”

“அந்தந்த நிலத்தில் விளைகின்ற பொருட்களை உண்டு பழகி இருப்போம். அதுவே, நமது உணவு பழக்கமாகி விட்டிருக்குமாக இருக்கும்… அல்லது இருக்கலாம்.” ஸ்வப்னில் கூறினான். உதாரணத்திற்கு நீ குறிப்பிட்ட எங்களது விழாக்களில் இடம் பெரும் பதார்த்தங்கள்.

“ம்ம்”

“ம்ம்… நிலம் தான் காரணம்… மண்ணின் தன்மை பொறுத்து எங்கு என்ன விளைகின்றதோ அதுதான் மக்களின் உணவுப் பழக்கமாக மாறுகின்றது” இது சுரேன்.

“குடும்பம், சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்கள் என்று நான் நினைக்கின்றேன்” கபீர்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!