“தனக்கு தேவையானவைகளை உபயோகித்துக் கொள்ளும் வண்ணம் விளைவித்துக் கொள்வதாக இருக்கலாம்… கடுகு எண்ணை உபயோகம் குறித்து குறிப்பிட்டாயே?” இன்னொருவன்.
“எந்த உணவும் மற்றதை விட குறைவானதோ,மேலானதோ அல்ல இதுதான் மாரல் ஆஃப் தி ஸ்டோரி” என ஒருவன் சொல்லவும் மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“சோ…” ராஜா ஆரம்பிக்க,
“நீ நிறுத்தப்பா, நாங்களும் பேசுவோம்” தடுத்தாள் ஷீலு.
“சோ…. அதாவது என்ன சொல்ல வரேன்னா மனிதன் என்ன சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து ஒருபோதும் அரசியல் செய்யக் கூடாது. சாப்பிடாமல் இருக்கும் பசித்தவர்களுக்கு குறைந்த பட்ச உணவாவது கிடைப்பதற்காக வேண்டுமானால் அரசியல் செய்யலாம்.எப்படி?” கேட்டதும் கரகோஷங்கள் எழுந்தன.
“நம்முடைய முதல் சம்பளம் வந்ததும் ஆளுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து பசித்தவர்களுக்காக எதையாவது செய்வோமா?”
“வாவ் நல்ல ஐடியா” பெரும்பாலானோர் சம்மதித்தனர்.
கதவை தட்டிக் கொண்டு ஹெச் ஆர் உள்ளே வந்தார்.
உரையாடலில் ஒன்றிணைந்தவர்கள் நிச்சயம் சிறிதாக எதையாவது செய்வார்கள். செய்யட்டுமே… யாவரும் கேளிர் தாமே?!
தொடரும்


Leave a Reply